கோவை, உக்கடம், பிலால் நகர் சேர்த்த ஷேக் அப்துல் காதர். இவர் பேட்டரி இருசக்கர வாகனம் விற்பனை செய்து வரும் பிரவீன் என்பவரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட ஷேக் அப்துல் காதர் என்பவர் தான் ரூபாய் 1.06.000 பணம் gpay செலுத்தி விட்டதாகவும் அதன் பேரில் பேட்டரி வாகனத்தை டோர் டெலிவரி உக்கடம் பை பைபாஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் தனக்கு டெலிவரி செய்யுமாறு கூறியதன் பேரில் அந்த வாகனத்தை டெலிவரி பாய் பெட்ரோல் பங்க் அருகில் சென்று கொடுத்ததாகவும் வண்டியை ஓட்டி பார்ப்பதாக கூறி வண்டியை எடுத்துச் சென்றவர் வெகு நேரமாகியும் வராத காரணத்தினால் தனது வண்டியை ஓட்டிச் சென்ற நபரையும் வண்டியையும் கண்டுபிடித்து தருமாறு கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிலால் நகரைச் சேர்ந்த ஷேக் அப்துல் காதர் என்பத தெரியவந்தது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.