நீலகிரியின் 115 வது மாவட்ட ஆட்சித் தலைவராக அருணா I.A.S. பொறுப்பேற்பு..!

நீலகிரி மாவட்ட ஆங்கிலேயர் காலத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு ஆட்சியராக பணியாற்றியவர்களில் 115 ஆவது ஆட்சித் தலைவராக நீலகிரி மாவட்டத்திற்கு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த மு.அருணா நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். நீலகிரி மாவட்டத்திற்கு ஆட்சியராக பொறுப்பேற்க வருகை புரிந்த மு அருணா I.A.S. வருகை ஓட்டி உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். உடன் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் பொது தனப்ரியா மற்றும் மாவட்ட ஆட்சியர்
அலுவலக உயர் அதிகாரிகள் வரவேற்பு நிகழ்வில் இருந்தனர். நீலகிரி மாவட்ட ஆதிவாசி நல சங்க தலைவர் ஆல்வாஸ், செயலாளர் புஷ்பக்குமார், இணைந்து நீலகிரி பழங்குடியினர் பாரம்பரிய முறையில் கொம்பு இசையுடன் புதிய ஆட்சியருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது .நிகழ்ச்சியில் தொடர் நல சங்கத் தலைவர் சத்யராஜ் மலர் கொத்து கொடுத்து வரவேற்றார் மற்றும் பழங்குடியினர் தொடர், கோத்தர் இருளர், குறும்பர் பணியர் சார்பாக பொன்னாடை அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த அரசு அதிகாரிகள் நீலகிரி மாவட்ட பழங்குடியினர் இணைந்து நீலகிரி மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்கும் ஆட்சியர் மு அருணா பழங்குடியினர் பாரம்பரிய முறைப்படி ஹொவ் என்ற வார்த்தையால் கடவுளை நினைத்து ஆட்சியரை உயர்த்தி மரியாதை உடன் தங்கள் அலுவலகத்திற்கு பழங்குடியினர் பாரம்பரிய முறையில் கொம்பு இசையுடன் அழைத்துச் சென்றனர்.
இதில் அரசு துறை அலுவலர்கள் மற்றும் நீலகிரி பழங்குடியினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து பதவி ஏற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படும் குறைபாடுகளை கவனிக்கவும் மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும், நீலகிரி மழைக்காலத்தில் இயற்கை பேரழிவிலிருந்து புதிய தொழில்நுட்பம் மூலமாக கவனம் செலுத்தப்படும் என்று கூறினார். நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பத்திரிகை நிருபர்கள் புதிய ஆட்சித் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ச்சியாக ஆட்சியர் அலுவலகத்தின் உயர் அதிகாரிகள் ஆட்சியரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்..