கோவை அருகே உள்ள சின்ன தடாகம்பாலாஜி நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 65) கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர்.இந்த நிலையில் நேற்று இவர் அவரது மனைவியிடம் பஸ் டிக்கெட்டுக்கு பணம் கேட்டார். மனைவி கொடுக்க மறுத்தார். இதனால் மணமுடைந்த மூர்த்தி சாணி பவுடரை கரைத்துக் குடித்தார். அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து அவரது மகன் பழனிச்சாமி தடாகம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
பஸ் டிக்கெட்டுக்கு மனைவி பணம் கொடுக்காததால்.. கணவர் சாணிப்பவுடர் குடித்து தற்கொலை..
