ஆசிய விளையாட்டு போட்டிகள்… இந்திய வீராங்கனைகளுக்கு சீனா அனுமதி மறுப்பு விளையாட்டுத் துறை அமைச்சர் பதிலடி.!!

நாளை செப்டம்பர் 24ம் தேதி சீனாவின் ஹாங்சோவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்க உள்ளன. இதிஹ்ல் கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து உட்பட பல போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்நிலையில், சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இந்திய வீராங்கனைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சீனாவின் இந்த செயலுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், சீனாவின் செயலை கண்டிக்கும் வகையில் இந்திய விளையாட்டுத்துறை அமைச்சரின் சீன பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சீனாவில் ஆசிய போட்டிகள் தொடக்க விழாவில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. சீனாவின் இந்தச்செயலால் அமைச்சரின் சீனப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆசிய விளையாட்டில் பங்கேற்கும் இந்திய அணியில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த 3 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியா – சீன இடையே பல லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்று வருகின்றன. இருந்தபோதிலும் இரு நாடுகள் இடையே எல்லை பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை.
அதுமட்டுமின்றி அவ்வப்போது எல்லைப்பகுதிகளை கடந்துஉள்ளே நுழையவும் சீனா முயற்சி செய்து வருகிறது. இந்த சமயத்தில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இந்திய வீராங்கனைகளுக்கு ஆசிய விளையாட்டு போட்டியில் சீனா அனுமதி மறுத்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.