கோவை மாவட்டம் வால்பாறை பகுதியை சேர்ந்தவர் முருகம்மாள் (வயது 45) இவரது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை
எடுக்க அங்குள்ள ஏடிஎம் மையம் சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த அடையாளம் தெரியாத ஒரு நபரிடம் அவரது ஏடிஎம் கார்டு மற்றும் பின் நம்பரை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளார். அப்போது அந்த நபர் கார்டை பெற்று ஏடிஎம்-ல் போட்டுவிட்டு உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லை என்று சொல்லியதாகவும், பின்னர் கார்டை கீழே தவறவிடுவது போல் நடித்து வேறு ஒரு ஏடிஎம் கார்டைமாற்றி கொடுத்து சென்றதாகவும், பின் தனது கார்டை பயன்படுத்தி வேறு வங்கி ஏடிஎம் மிஷினில் ரூ. 9 ஆயிரம் பணம் எடுத்து மோசடி செய்துள்ளார். இதுகுறித்து முருகம்மாள் வால்பாறை காவல் நிலையத்தில் புகார் செய்தார் . இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேற்படி வழக்கில் குற்றவாளியை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார் . இதன் பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன் விசாரணை நடந்தது. குற்றவாளியை தேடி வந்த நிலையில் நேற்று கேரள மாநிலத்தைச் சேர்ந்த சைனபா தெற்கே மகன் நஜுப் ( வயது 36)
என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டதில் மேற்படி மோசடி வழக்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.மேற்கண்ட எதிரியானவர் கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் ஏ.டி.எம். மையங்களில் சென்று முதியவர்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி ரகசிய எண்ணை பெற்றுக் கொண்டு வேறு கார்டை கொடுத்துவிட்டு பின்பு ரகசிய எண்ணை பயன்படுத்தி பணத்தை திருடி வந்தது தெரிய வந்தது. இந்நிலையில் மேற்படி நஜீப்பை கைது செய்து அவரிடம் இருந்து 43 போலியான ஏடிஎம் கார்டுகள் மற்றும் ரூ. 5290 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது..
ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து தருவதாக பெண்ணிடம் ரூ.9 ஆயிரம் மோசடி – கேரளா ஆசாமி கைது.!!
