இதனால் அந்த பெண் தொடர்ந்து 36 மணி நேரம் வீடியோ அழைப்பில் இருந்துள்ளார்.போதைப்பொருள் சோதனை என்ற பெயரில், அந்த பெண்ணின் ஆடைகளை கழற்றுமாறு வற்புறுத்தியுள்ளனர், அதன் பிறகு, அவரது நிர்வாண வீடியோ பதிவு செய்யப்பட்டு மிரட்டலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வீடியோ கிளிப்பை டார்க் வெப்பில் விற்கப் போவதாக அந்த கும்பல் மிரட்டியுள்ளது. இதையடுத்து அந்த பெண்ணிடம் இருந்து ரூ.15 லட்சம் பணம் அனுப்பும்படி மிரட்டியுள்ளனர். இதனால் அந்த பெண் அவர்கள் கூறிய தொகையை அனுப்பியுள்ளார்.அதன் பிறகும் , மோசடி செய்தவர்கள் கூடுதலாக ₹10 லட்சம் கேட்டு, அவரது நிர்வாண வீடியோக்களை டார்க் வெப்பில் விற்கப் போவதாக மிரட்டியுள்ளனர்.
பின்னர் அந்த பெண் அழைப்பை முடித்துவிட்டு காவல்துறையை தொடர்பு கொண்டுள்ளார். தகவல் தொழில்நுட்ப சட்டம், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் மோசடி செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றவாளிகளைப் பிடிக்க வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் ஸ்கேம்கள் அதிகரித்ததுள்ளதற்கு இந்த சம்பவம் மற்றுமொரு எடுத்துக்காட்டு.இதற்கிடையில், கூரியர் சேவைகள் தொடர்பான தனிப்பட்ட தகவல்களை நிறுவனம் ஒருபோதும் கேட்பதில்லை என்று பெட் எக்ஸ் தெளிவுபடுத்தியது. பெட் எக்ஸ் நிறுவனத்திடம் இருந்து தனிப்பட்ட தகவல்களை யாராவது உங்களிடம் கேட்டால், வாடிக்கையாளர்கள் போலீசில் புகார் செய்யுமாறு நிறுவனம் அறிவுறுத்தியது..