பூந்தமல்லி குமணன்சாவடியில் உள்ள ஒரு டீ கடையில் மாங்காடு அம்பாள் நகரைச் சேர்ந்த இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி மாநில தலைவர் பூவை ராஜாஜி வயது 45 தகப்பனார் பெயர் கிருஷ்ணன் என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த சில ரவுடிகள் மறைத்து வைத்திருந்த பட்டாகத்தியால் தலை மற்றும் உடலெங்கும் சரமாரியாக வெட்டி விட்டு சாவகாசமாக ஹாயாக விசில் அடித்தபடி நடந்து சென்றனர் . சற்று நேரத்தில் எல்லாம் துடிதுடித்த படி ராஜாஜி ரத்த வெள்ளத்தில் இறந்து போனார் . இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததும் போலீஸ் ஜீ ப்பில் சைரன் அலற விட்டபடி ஸ்பாட்டிற்கு வந்தனர். ராஜாஜியின் பிரேதத்தை கைப்பற்றி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து கொலையாளிகளை தீவிரமாக துப்புத் துலக்கி தேடிவந்த நிலையில் கொலை யான ராஜாஜிக்கு குமணன்சாவடி பகுதியைச் சேர்ந்த பயங்கர ரவுடியான கோபால் வயது 61 தகப்பனார் பெயர் முருகப்பிள்ளை என்பவனின் மனைவியான கௌரியுடன் பழக்கம் ஏற்பட்டு கௌரி தனது கணவன் கோபாலை கடந்த 4 வருடமாக ராஜாஜியுடன் குடும்பம் நடத்தி வந்தார் இந்த நிலையில் கௌரி சாலை விபத்தில் மரணம் அடைந்தார் . இந்த நிலையில் ராஜாஜிக்கும் ரவுடி கோபாலுக்கும் முன் விரோதம் இருந்து வந்தது ரவுடி கோபாலின் தூண்டு தலின் பேரில் சிஷ்ய கேடிகளை அழைத்து ராஜாஜியை கொலை செய்ய உத்தரவு போட்டார் அதன்படி ரவுடி கிருஷ்ணன் வயது 34 ராஜேந்திரன் காட்டுப்பாக்கம் பூந்தமல்லி 2. கோபால் வயது 61 தகப்பனார் பெயர் முருகப் பிள்ளை குமணன்சாவடி பூந்தமல்லி 3. சம்பத்குமார் வயது 45 தகப்பனார் பெயர் பழனிவேல் மாங்காடு 4. ராஜேஷ் வயது 32 தகப்பனார் பெயர் பாலன் குமணன்சாவடி சந்தோஷ் குமார் வயது 32 தகப்பனார் பெயர் லோகநாதன் குமணன்சாவடி ஆகிய 5 ரவுடிகளும் ராஜாஜியை துடிக்க துடிக்க கொலை செய்துவிட்டு அவரது உடலில் வழிந்த ரத்தத்தை விபூதியில் கலந்து முகத்தில் பூசிக் கொண்டனர் ஜெய் காளி ஓம் காளி என பயங்கரமாக சப் தம் போட்டனர் இதில் பயங்கர குற்றவாளி கோபாலை அலறி துடிக்கும் குழந்தைகளும் வாயை பொத்திக் கொள்வார்களாம் கைது செய்யப்பட்ட ஐந்து குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்..