கோவையில் பல்வேறு பகுதிகளில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதே போன்று லாலி ரோடு சிக்னல் பகுதியிலும் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. உழவர் சந்தை அருகே சாலை விரிவாக்கத்திற்காக மண்மேடுகள் தோண்டப்பட்டு, ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு சமன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று பெய்த மழையினாலும், சாலை விரிவாகத்திற்காக தோண்டப்பட்டிருந்த குழியாலும் லாலி ரோடு பகுதியில் இருந்த சிக்னல் கம்பம் இன்று காலை சரிந்து விழுந்தது. இதுகுறித்து போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை நிறுத்தி பொக்லைன் எந்திரன் மூலம் சிக்னலை தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் லாலி ரோடு 4 சந்திப்பிலும் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காலை நேரம் என்பதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.