கோவை : கட்டுமான பணிகளுக்கு தீயணைப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெறுவது அவசியம் .இதே போல பொது நிகழ்ச்சிகள் நடத்தும் போதும் தடை யின்மை சான்றிதழ் பெறுவது வழக்கம். இந்த நிலையில் கோவை கணபதி தீயணைப்பு நிலையத்தில் தடையில்லா சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் துணை சூப் ரெண்டு திவ்யா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள் .தீயணைப்பு நிலையத்தின் அனைத்து அறைகளும் பூட்டப்பட்டு அங்கிருந்த மேஜர் டிராயர்கள் பீரோக்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த ரூ 1 லட்சத்து 41 ஆயிரத்து 500 சிக்கியது.இந்த பணம் தொடர்பாக தியணைப்பு நிலைய அதிகாரி முத்து செல்வனிடம் போலீசர் துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள். ஆனால் அதற்கு அவரால் சரியான விளக்கம் அளிக்க முடியவில்லை .இதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றிய பணத்தை லஞ்ச பணமாக கருதி நிலைய அதிகாரி முத்து செல்வன் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த அதிரடி சோதனை அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
தீயணைப்பு நிலையத்தில் ரூ. 1.50 லட்சம் லஞ்ச பணம் பறிமுதல் – அதிகாரி மீது வழக்குபதிவு.!!
