அடேங்கப்பா!! ஏ.ஆர்.ரஹ்மானை மிஞ்சிய அனிருத்… சம்பளம் இத்தனை கோடியா..?

ரஜினியின் ஜெயிலர், கமலின் இந்தியன் 2, விஜய்யின் லியோ, அஜித்தின் விடாமுயற்சி என தமிழில் உருவாகும் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் அனிருத் தான் இசையமைப்பாளர்.

கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜுனியர் என்டிஆரின் நடிப்பில் தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகும் படத்துக்கும் அனிருத் இசையமைப்பாளர்.

மேலும் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் ஜவான் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் விஜய்சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்தப் படத்துக்கு அனிருத் ரூ.10 கோடியை சம்பளமாக பெற்றுள்ளாராம்.

ஒரு படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.8 கோடி சம்பளமாக வாங்குவதாகவும், குறுகிய காலத்திலேயே அனிருத் அவரை விட அதிகம் சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது..