துபாயில் இருந்து இன்று டெல்லி வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது ஒரு பயனிடம் இருந்து விலை உயர்ந்த வாட்ச் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த பயணியின் பையை சோதனை செய்த போது அதில் ரோலக்ஸ் ஜேக்கப் அண்ட் கோ, பைகெட், லிம்லைட் ஸ்டெல்லா உள்ளிட்ட விலை உயர்ந்த ஏழு வாட்சுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் ஜேக்கப் அண்ட் கோ எனும் வாட்ச் தங்கம் மற்றும் வைரக்கல் பதிக்கப்பட்டு இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. ‘
இந்த நிலையில் அந்த ஒற்றை வாட்ச்சின் மதிப்பு 27 கோடியே 9 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வாட்ச்சிகளுடன் சேர்த்து தங்கம் வைரம் பதிக்கப்பட்ட கைச்செயின் மற்றும் iphone போன்றவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதன்பின் அந்த பயணியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு பலகோடி ரூபாய் எனவும் அது 60 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்ததற்க்கு சமம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.