கோவை பனைமரத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தென்னரசு, இவர் கோவையில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். பனைமரத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக தென்னரசு காவல் துறைக்கு தகவல் அளித்ததாக தெரிகிறது. இதனால் அவருக்கும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருந்து உள்ளது. இந்நிலையில் தென்னரசு வீட்டுக்கு வந்த 9 பேர் கொண்ட கும்பல் அவர் வீட்டில் ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். பின்னர் தென்னரசுவை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதோடு அவரை மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பி உள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த தென்னரசு அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து செல்வபுரம் காவல் நிலையத்தில் தென்னரசு புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தென்னரசு தாக்கியது தொடர்பாக பனைமரத்தூரைச் சேர்ந்த காளி அவரது சகோதரர் கிஷோர், சதீஷ்குமார், விஜயகுமார், 17 வயது சிறுவன், பத்மா, ரோகினி நந்தினி ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.