கோவை : ஈரோடு மாவட்டம் மாணிக்கம் பாளையத்தைச் சேர்ந்தவர் ஆசிப் என்ற ஆசிப் முஸ்தகீர் (வயது 32) கன்னியாகுமரி மாவட்டம், திருவிதன் கோடு, கல்குளத்தைச் சேர்ந்தவர் அப்துல் சலீம் (வயது 34)இவர்கள் இருவரும் கோவை மத்திய சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் நேற்று சிறையில் இருந்து தப்பிக்க முயன்றததாக கூறப்படுகிறது . இதை சிறை காவலர்கள் தடுத்தனர் -அவர்களை இந்த இரு விசாரணை கைதிகளும் தாக்கினார்கள். தப்ப முயன்ற இருவரையும் சிறை காவலர்கள் மடக்கி பிடித்தனர். இந்த தாக்குதலில் சிறை காவலர்களுக்கு காயம் ஏற்பட்டது. இந்த இரு கைதிகளும் சிறை காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்களாம் .இது குறித்து ஜெயிலர் மனோரஞ்சிதம் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார், சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக கைதிகள் ஆசிப்முஸ்தகீர், அப்துல் சலீம் ஆகியோர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறை காவலர்களை தாக்கி கைதிகள் தப்ப முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையொட்டி மத்திய சிறைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது..
கோவை மத்திய சிறை காவலர்களை தாக்கி தப்ப முயற்சி – 2 கைதிகள் மீது வழக்குபதிவு..!
