கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் காளீஸ்வரி. இவர் நேற்று கோவை டாட்டாபாத்தில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே ஜீப்பில் ரோந்து சென்றார். அப்போது அங்கு திருநங்கைகள் சிலர் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நின்று ரோட்டில் நின்று கொண்டு பணம் வசூலித்துக் கொண்டிருந்தனர். அவர்களை கண்டித்து அறிவுரை வழங்கினார். இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் 10 பேர் சேர்ந்து சப-இன்ஸ்பெக்டர் காலிஸ்வரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .பின்னர் அவர்கள் திடீர் என்று ஜீப்பின் கண்ணாடி உடைத்து சேதப்படுத்தினர். மேலும் அவர்கள் காளீஸ்வரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டகாளீஸ்வரி காட்டூர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் 10 திருநங்கைகள் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..