கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள சுப்பே கவுண்டன் புதூரை சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மகன் உதயகுமார் ( வயது 19) இவர் அங்குள்ள பால் கம்பெனியில் சரக்கு ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 18ஆம் தேதி வேலை முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பும் போது 3 பேர் இவரை வழிமறித்து லிப்ட் கேட்டனர் .அவர் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து ஆட்டோ கண்ணாடியை உடைத்து ,அவரைத் தாக்கி,ஆட்டோவில் இருந்த ரூ 1 லட்சத்து 1,400ரூபாயை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். இதுகுறித்து உதயகுமார் ஆனைமலை போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்கு பதிவு செய்து சுப்பே கவுண்டன் புதூரை சேர்ந்த சுதாகர் (வயது 29) ரமேஷ் குமார் ( வயது 33 )சதீஷ்குமார் ( வயது 33) ஆகியோரை கைது செய்தார்..பணம் பறிமுதல் செய்யப்பட்டது.