கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள செங்குட்டை பாளையத்தை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகள் காவியா அஞ்சலி ( வயது 23 )இவர் கோவை டாட்டாபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மதுக்கரை, மரப்பாலம் ஓம் சக்தி நகர் சேர்ந்த அகமத் சஹின் (வயது 23) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் டாட்டா பாத்தில் உள்ள காவியா அஞ்சலி அலுவலகம் அருகே தினமும் நின்று பேசிக் கொள்வார்கள்.இந்த நிலையில் அகமத் சஹீனிடம் குடிப்பழக்கம் இருந்தது காவிய அஞ்சலிக்கு தெரிய வந்தது .இதனால் அவரிடம் பேசுவதை தவிர்த்தார் .இதனால் ஆத்திரமடைந்த அகமத் சகின் காவிய அஞ்சலி அலுவலகம் அருகே வைத்து ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய்? என்னிடம் பேச விட்டால் உன்னை கொன்று விடுவேன் என்று கூறி அவரை தாக்கி, கீழே பிடித்து தள்ளி கொலை மிரட்டல் விடுத்தாராம். காவிய அஞ்சலி சத்தம் போட்டார் .அந்த நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார் .இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது.இன்ஸ்பெக்டர் பாதுஷா, சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து அஹமத் சகினை நேற்று கைது செய்தனர். இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல், தாக்குதல் உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..
காதலிக்க மறுத்த இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் – வாலிபர் கைது..!
