கல்லூரி மாணவரை தாக்கிக் கொல்ல முயற்சி – 3 பேர் கைது..!

கோவை சுந்தராபுரம் மாச்சம் பாளையம் ரோட்டை சேர்ந்தவர் பரமானந்தம் .இவரது மகன் அனந்த பத்மநாபன் (வயது 20 ) குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3-ம்ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் முரளிதரன் முகிலன் ஆகியோரை குடிபோதையில் வந்த ஒரு கும்பல் தாக்கியது. இதை அனந்த பத்மநாபன் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரை செங்கலால் தாக்கியது . இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டது. சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து அனந்த பத்மநாபன் சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் வழக்கு பதிவு செய்து மாச்சம் பாளையம் திருநகரை சேர்ந்த சதீஷ் (வயது 20) குறிச்சி முதலியார் வீதியைச் சேர்ந்த கார்த்திக் ( வயது 29) சீனிவாசன் நகர் பிரவீன் குமார் (வயது 28 )ஆகியோரை கைது செய்தார். இளங்கண்ணன் என்பவர் தப்பி ஓடிவிட்டார் .அவரை தேடி வருகிறார்கள்.