கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம், அரிசன காலனியை சேர்ந்தவர் ராஜு. அவரது மகன் பிரசாந்த் (வயது 21) அங்குள்ள தனியார் கல்லூரியில் எம் .பி.ஏ படித்து வருகிறார். நேற்று இவர் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் .அப்போது அந்த வழியாக காரில் வந்த ஒருவர் இவரது பைக் மீது மோதுவது போலசென்றார். இதனால் பிரசாந்த் தனது பைக்கை நிறுத்தினார் .இந்த நிலையில் காரில் இருந்தவர் இறங்கி வந்து பிரசாந்தை கல்லால் தாக்கினார் .இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அவர் காரில் தப்பி சென்றுவிட்டார் .இது குறித்து பிரசாந்த் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கார் ஓட்டி வந்த மருதநாயகம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.