கோவை ஆர்.எஸ். புரம் ,லைட் ஹவுஸ் ரோட்டை சேர்ந்தவர் சுரேஷ்குமார் .இவரது மகன் பூபாலன் (வயது 19 ) கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் அங்குள்ள சித்தி விநாயகர் கோவில் அருகே தனது நண்பர் லோகேசுடன் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆர். எஸ் .புரம், பூ மார்க்கெட், சித்தி விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் ( வயது 26 )என்பவர் பூபாலனிடம் தகராறு செய்தாராம் . பின்னர் அவரை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் பூபாலன் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.. இது குறித்து ஆர் எஸ் புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை நேற்று இரவு கைது செய்தார். மணிகண்டன் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் மீது கொலை முயற்சி, தாக்குதல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.