கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள மண்ணூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் துரையன் (வயது 65) .கூலி தொழிலாளி.இவரது மனைவி வள்ளியம்மாள்( வயது 52 ).துரையன் குடிப்பழக்கம் உடையவர் .இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று குடித்துவிட்டு வந்து உருட்டு கட்டையால் மனைவியை தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது .சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு துரையன் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து வள்ளியம்மாள் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து துரையனை கைது செய்தார்.இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல், தாக்குதல் உட்பட 5பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..