கோவை ரங்கே கவுடர் வீதியில் உள்ள கனி ராவுத்தர் தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 30) இவரது மனைவி ஜீவா (வயது 32) இவர்களுக்கு 20 21- ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. குடும்ப பிரச்சனை காரணமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்த நிலையில் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த பிரசாந்த் மனைவி மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றினார். இதில் அவர் உடல் முழுவதும் வெந்தது. பின்னர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் .இதில் ஜீவாபடுகாயம் அடைந்தார் .இவர் கோவை. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் .இது குறித்து கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் வழக்கு பதிவு செய்து கணவர் பிரசாந்தை நேற்று கைது செய்தார். இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..
கொதிக்கும் வெந்நீரை மனைவி மீது ஊற்றிக் கொல்ல முயற்சி – கணவர் கைது..!
