கோவை ரத்தினபுரி கண்ணப்பன் நகர் நாராயணசாமி வீதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் .மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி பிரியா ( வயது 28) இவர்களுக்கு 2013 – ஆம் ஆண்டு திருமண நடந்தது . 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் கணவர் ரஞ்சித் குமார் மற்றொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தாராம். இதை அவரது மனைவி கண்டித்தார்.இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கணவர் ரஞ்சித் குமார் மனைவி பிரியாவை தலை முடியை பிடித்து இழுத்து தாக்கி, காலால் மிதித்து கொலை செய்ய முயன்றாராம் .இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து பிரியா ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் அஜித் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார் .இது தொடர்பாக கணவர் ரஞ்சித் குமார் நேற்று மாலை கைது செய்யப்பட்டார் . இவர் மீது கொலை மிரட்டல், தாக்குதல் உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..