கள்ளக்காதலை கண்டித்த மனைவியை தாக்கி கொல்ல முயற்சி – கணவர் கைது..!

பொள்ளாச்சி பக்கம் உள்ள ஜமீன் முத்தூர் அரண்மனை வீதியைச் சேர்ந்தவர் சிவா (வயது 35) இவரது மனைவி பிரியா (வயது 27) இவர்களுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் ,ஒரு மகள் உள்ளனர் .சிவா குடிப்பழக்கம் உடையவர் .இந்த நிலையில் இவர் மற்றொரு பெண்ணுடன் கள்ளக்காதல் வைத்திருந்தாராம் .இது இவரது மனைவிக்கு தெரிய வந்தது. இதை கண்டித்தார் .இதனால் ஆத்திரம் அடைந்த சிவா அவரது மனைவியை கைகளால் தாக்கியும் ,காலால் வயிற்றில் எட்டி உதைத்தும், கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து பிரியா பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து கணவர் சிவாவை நேற்று மாலை கைது செய்தார். இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..