கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள வனக்கல்லூரி வளாகத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான வன மரபியல் மற்றும் மரப் பெருக்கு அலுவலகம் உள்ளது.இங்கு கடந்த மாதம் 4-ந் தேதி ‘”மல்டி டாஸ்க் ஊழியர்” பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது . இதில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி 4 பேர் வெற்றி பெற்றனர். அவர்கள் நேர்முக தேர்வக்கு அழைக்கபட்டனர்..இதன்படி அவர்கள் நேற்று கோவைக்கு வந்தனர். அவர்களுடைய ஹால்டிக்கெட், சான்றிதழ்கள், கைரேகை, படங்களை ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் கைரேகை ஒத்து போகவில்லை. இவர்களுக்கும் ஹால் டிக்கெட்டில் ஒட்டிய படங்களுக்கும் வித்தியாசம் இருந்தது கண்டுபிடிக்கபட்டது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் டைரக்டர் டாக்டர் சி குன்னிகண்ணன் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரெஜினா இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரண நடத்தினார். இதில் லட்ச கணக்கில் பணம் கொடுத்து ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதி வெற்றி பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பணியில் சேருவதற்கு வந்த அரியானா மாநிலத்தை சேர்ந்த அமித்குமார் (வயது 30) மற்றொரு அமித் குமார் ( வயது 26 )அமித் (வயது 23) சுலைமான் (வயது 25) ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு பதிலாக பணத்தைப் பெற்றுக் கொண்டு தேர்வு எழுதியவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள். இவரகள் மீது மோசடி உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..