தமிழகத்தில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை உடனடியாக திறக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகில் தமிழ்நாடு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை உடனடியாக திறக்க வேண்டும், தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கப்பட வேண்டும்,

முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு மத்திய மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயலாளர் நாகேந்திரன் மற்றும் மாநில செயலாளர் ராம்மோகன் ஆகியோர் தலைமையேற்று நடத்தினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.