கோவை மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில் கோவையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவது இரவு – பகலாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் நேற்று அந்த பகுதியில் தீவிர சோதனை நடத்தி வந்தனர் ...
கோவை ரயில் நிலையத்துக்கு நேற்று அசாம் மாநிலம் திப்ருகரில் இருந்து கோவை வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் விரைவு ரெயில் வந்தது .அந்த ரெயிலில் கோவை ரெயில்வே போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் ஏட்டு பத்ம கிருஷ்ணன் ஆகியோர் சோதனை நடத்தினார்கள். அப்போது எஸ். 2 என்ற முன்பதிவு பெட்டியில் சந்தேகத்துக்கு இடமான ...
கோவை டாடாபாத், ஹட்கோ காலனி ,அண்ணா நகர் பகுதியில் சங்குனூர் ஓடை தூர் வாரும் பணி நடந்து வருகிறது. சங்கனூர் ஓடையின் கரையோரம் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான 2 மாடிக்கொண்ட வீடு இருந்தது .ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்ததால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த வீட்டின் பின்பகுதியை 10 அடி தூரம் வரை இடித்து அகற்ற வேண்டும் ...
கோவை கவுண்டம்பாளையம்,ராமசாமி நகரில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி கூடம் உள்ளது. இங்கு கடந்த 13 ஆம் தேதியிலிருந்து 20 ஆம் தேதி வரை விடுமுறையையொட்டி பள்ளிக்கூடம் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று பள்ளிக்கூடத்தின் அலுவலக கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது .உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த 3 கம்ப்யூட்டர்கள், 3 கீபோர்டு, 3 மானிட்டர் ஆகியவற்றை யாரோ ...
கோவை மாவட்டத்தில் 2023ம் ஆண்டை விட அதிகளவில் 2024ம் ஆண்டு 13 தீயணைப்பு நிலையங்களுக்கு 7192 அழைப்புகள் வந்துள்ளது. அதில் பாம்புகளை மீட்க வந்த அழைப்புகள் கூடுதல் என தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மாவட்ட அலுவலர் தெரிவித்தார்.கோவையில் தீயணைப்புத்துறையில் மாநகரில் தெற்கு, வடக்கு, பீளமேடு, கோவை புதூர், கணபதி மற்றும் புறநகரில் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, ...
கோவை செல்வபுரம் ,செட்டி வீதி ,சாவித்திரி நகரை சேர்ந்தவர் விஷ்ணு. இவரது மனைவி ஜோதி ( வயது 26 ) இவர் கடந்த 5 – ந் தேதி தனது 2 வயது மகளுடன் வீட்டிலிருந்து திடீரென்று மாயமாகி விட்டார் .இது குறித்து விஷ்ணு செல்வபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் அழகுராஜ் வழக்கு பதிவு ...
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தேவகுமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது சட்ட விரோதமாக மது பாட்டிலை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை ...
கோவை ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி எப்)போலீசார் கோவை ரயில் நிலையத்தில் உள்ள முதலாவது பிளாட்பாரத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பிளாட்பாரத்தில் 2 சாக்கு முட்டைகள் அனாதையாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பிரித்து பார்த்த போது அதில் 31 வெளிமாநில (பாண்டிச்சேரி) மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யாரோ ரயிலில் கடத்தி வந்துள்ளனர். ...
கோவை கணபதி,மணியக்காரன் பாளையம் பாலமுருகன் நகரை சேர்ந்தவர் ஜஹாங்கீர் இவரது மகன் பர்வேஸ் அஹமது ( வயது 18) சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி. இ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி அவரது வாட்ஸ்ஆப் எண்ணுக்கு ஒரு மிரட்டல் மெசேஜ் வந்தது .அதன் பின்னர் அவர் அந்த நம்பரை பிளாக் ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள லோயர் பாரளை எஸ்டேட்ட் குடியிருப்பில் நேற்று முன்தினம் சரோஜினி வயது 72 என்பவர் தலை மற்றும் உடலில் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டிருந்தார் இச்சம்பவம் குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிற்கிணங்க காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் துணை கண்காணிப்பாளர்கள் ஸ்ரீநிதி, கிருஷ்ணன் மற்றும் வால்பாறை ...