விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்த 20 நாள்களில் கடந்த பிப்ரவரி மாதம் வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் பதவி பெற்றவர் ஆதவ் அர்ஜுனா. ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் (Voice Of Commons)’ எனும் தேர்தல் வியூக நிறுவனத்தின் மூலம் மாநாடுகளை ஒருங்கிணைப்பது, தேர்தல் வியூகங்களை வகுப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகிறார். 2021 தொடக்கத்திலிருந்து வி.சி.க-வின் ...

கோவை சிங்காநல்லூர் அய்யர் லே. அவுட்டை சேர்ந்தவர் சதீஷ்குமார் .இவரது மனைவி ஜெயசூர்யா ( வயது 31)குடும்பத் தகராறு காரணமாக நேற்று இவரை அவரது கணவர் சதீஷ்குமாரும்,மாமனார் தாமோதரனும் சேர்ந்து காலால் மிதித்து, அடித்து உதைத்தார்களாம். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து மனைவி ஜெய் சூர்யா ...

கோவை அருகே உள்ள சின்ன வேடப்பட்டி ,சக்தி நகரை சேர்ந்தவர் ஆ மெல்.இவரது மனைவி ஜெயராணி ( வயது 68 ) மளிகை கடை நடத்தி வருகிறார்கள் .நேற்று காலை 6 மணிக்கு இவர் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி கால் லிட்டர் பால் பாக்கெட் வேண்டும் என்று ...

கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக் கிணறு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 57) தொழில் அதிபர். இவருக்கு பீளமேடு பகுதியிலும் சொந்தமாக வீடு உள்ளது. அவர் நேற்று முன்தினம் வெள்ளக் கிணறில் உள்ள தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பீளமேட்டில் உள்ள வீட்டுக்கு சென்றார். இதற்கிடையே அவரின் வெள்ளக் கிணறு வீட்டை சுத்தம் ...

கோவை அருகே உள்ள சின்னியம்பாளையத்தில் மகளிர் சுய உதவி குழுவுள்ளது. இதில் 28 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களுக்கு சூலூர் அருகே உள்ள செலக்கரிச்சலை சேர்ந்த விஜயா ( வயது45) என்ற பெண் அறிமுகமானார். அவர் அன்பழகன் ( வயது 50) என்பவரை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அன்பழகன் தான் அறக்கட்டளை நடத்தி வருவதாகவும், நீங்கள் ஊனமுற்றோர் ...

கோவை திருச்சி ரோட்டில் உள்ள சிங்காநல்லூர் குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சிங்காநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி லாவண்யா சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் இளங்கோவன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிணமாக ...

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வட்டியூரை சேர்ந்தவர் விஜித்குமார் (வயது 36) இவர் கோவையில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வந்தார்.குடிப்பழக்கம் உடையவர் .இவர் ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தார்.கடந்த சில நாட்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று லாட்ஜில் உள்ள ...

கோவை ஆர். எஸ். புரம், பி. எம். சாமி .காலனி 2-வது வீதியை சேர்ந்தவர் சுந்தரராஜன்,இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 43) இவர் கவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். தடாகம் ரோடு – டி.வி. சாமி ரோடு சந்திப்பில் ...

கோவை: தொழில் நகரமான கோவையில் பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. அங்கு தயாரிக்கப்படும் பல்வேறு வகையான பொருட்கள் மற்றும் எந்திரங்கள் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது .இந்த நிலையில் கோவை காட்டூர் பகுதியில் உள்ள கடைகளில் தனியார் நிறுவனத்தின் பெயரில் போலி பேரிங்குகள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக சம்பந்தப்பட்ட நிறுவனம் சார்பில் காட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. ...

கோவை மாவட்டம் காரமடை,தோலம்பாளையம் பகுதியில் ஒருவர் கஞ்சா செடி வளர்ப்பதாக காரமடை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடமான தோலம்பாளையம் அருகே சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது போதை பொருளான கஞ்சா செடி வளர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பொன்னுசாமி ...