வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி விகிதம் 5.4 சதவீதமாக உயர்வு என ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி விகிதம் 0.5% அதிகரிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். அதன்படி, வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4.9 சதவீதத்திலிருந்து 5.4 சதவீதம் உயர்வு, உடனடியாக ...
சேலம்: மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,80,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகலிருந்து 2,10,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நீர்வரத்து சரிந்ததால் தற்போது மேட்டூர் அணையிலிருந்து 1,80,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்மின் நிலையங்கள் வழியாக 23,000 கனஅடி தண்ணீரும், 16 கண் மதகு வழியாக 1,57,000 கனஅடி ...
இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் பலியான நிலையில், 40 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாய்லாந்து இரவு விடுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்ததாக மீட்பு சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாங்காக்கிலிருந்து தெற்கே சுமார் 150 கிலோமீட்டர் ...
வங்க கடலில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, பருவமழை மேலும் தீவிரமடையும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஒடிசாவில் சில பகுதியில் கன முதல் மிக கனமழை வரை பெய்யும் என்றும் ஆகஸ்ட 6 முதல் 10 வரை ஒடிசாவில் பரவலாக மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வங்ககடல் மற்றும் ...
சேலம் அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ளது தலை வெட்டி முனியப்பன் கோவில். இந்த கோவிலை பொதுமக்கள் கடந்த மூன்று தலைமுறைகளாக போற்றி பாதுகாத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆனால் புத்தர் சிலை தான் இப்படி தலை வெட்டி முனியப்பன் ஆக மாற்றப்பட்டது என்று நீண்ட நாட்களாக சர்ச்சை நீடித்து வந்தது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் ...
கோவை கணபதி, அண்ணா நகர் முதல் விதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி பானுமதி ( வயது 43) கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். இவர்களுக்கு மகள் லாவண்யா ஸ்ரீ (வயது 19 )தாயார் பானுமதியுடன் வசித்து வருகிறார்.இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி (பேஷன் டெக்னாலஜி) 2-ம் ஆண்டு ...
கோவை பேரூர் பக்கம் உள்ள ராம செட்டிபாளையத்தை சேர்ந்தவர் நடராஜ் .இவரது மனைவி அன்னம்மாள்(வயது 55) நேற்று இவர் தனியார்டவுன் பஸ்சில் வைசியாள் வீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயினை ஒரு பெண்நைசாக திருடினார். அவரை கையும் களவுமாக பிடித்து கடைவீதி போலீசில் ஒப் படைத்தார் .போலீசார் அவரை ...
வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் IFS சர்வதேச நிதி சேவை மையம் மீது நிதி மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் நிதி நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்த தமிழக காவல் துறைக்கு உத்திரவிட்டுள்ளது. இதனையடுத்து சென்னை, வேலூர் , கோவை உட்பட தமிழகம் ...
கோவை: மழைக்காலம் என்பதால் வகுப்பறைகளை தினமும் ஆய்வு செய்த பின்னரே மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு கோவை முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை வழங்கினார். இது தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலர் ஆர்.பூபதி தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது- கோவை மாவட்டத்தில் மழை பெய்து ...
ஊட்டி: தென்மேற்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, அரசுத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் ஊட்டி அரசினா் விருந்தினா் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக மாற்றுத் திறனாளி நலத் துறை செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஆனந்தகுமாா், மாவட்ட ஆட்சியா் அம்ரித் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்துக்கு தலைமை தாங்கி வனத்துறை அமைச்சா் ...