கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்கான வரைவு அறிவிப்பை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது. உரம், பூச்சி மருந்து, கட்டிட மேம்பாடு, கட்டிட பழுது நீக்கம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இடையூறு ஏற்படும் வகையில் சட்டங்கள் ...
நீலகிரி மாவட்ட தேசிய பசுமை படை சர்வதேச சிட்டு குருவிகள் தினம் உதகை அரசு மேல்நிலைப்பள்ளியில் அனுசரிக்கப்பட்டது இதில் பள்ளியின் மாணவ மாணவிகள் பங்கேற்றனர், இதில் ஒரு பகுதியாக சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதை குறித்தான விழிப்புணர்வு சிறப்புரைகள் வழங்கப்பட்டது மற்றும் மாணவர்கள் சிட்டுக்குருவிகள் அழியாமல் பாதுகாப்பதற்கு மாணவர் கைகளில் சிட்டுக்குருவிகளின் கூடு எப்படி வைக்க வேண்டும் அமைக்க ...
கோவை வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் நேற்று ராஜ வீதியில் உள்ள ஒரு கடையில் திடீர் சோதனை நடத்தினார் அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை (குட் கா) மறைத்து வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக ராஜு (வயது 65) சரவணா குமார் ( வயது 39 )ஆகியோர் ...
நெல்லையில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் படுகொலை செய்யப்பட்டார்.இந்த விவகாரத்தில் அப்போது நெல்லையில் உதவி கமிஷனராக பணிபுரிந்து வந்த செந்தில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.இவர் தற்போது கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ.சி)உதவி கமிஷனராக பணிபுரிந்து வருகிறார்.இவர் நெல்லையில் பணியாற்றியபோது ஜாகிர் உசேன் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காததால் அவர் கொடுத்த வாக்குமூலத்தின் ...
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் பொருட்கள் கடத்தலை தடுக்க குடிமை பொருள் குற்றபுலனாய்வு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக கோவையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தீவிரமாக சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது .இந்த பிரிவின் கோவை மண்டலம் அலுவலகம் கோவையில் உள்ளது கோவை மண்டலத்தின் ...
போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவை சென்னை கிண்டியில் போலீசார் சுட்டுப் பிடித்தனர். தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜா மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல்துறை தன்னை தேடுவதை தெரிந்து ஹைகோர் மகாராஜா கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில், ...
கடந்த சில வருடங்களாகவே கோடைக்காலங்களில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வெயிலை பேரிடர் மேலாண்மைத் திட்டங்களில், வெப்ப அலைகள் போன்ற “புதிய மற்றும் வளர்ந்து வரும்” பேரிடர்களை மத்திய அரசு சேர்க்க வேண்டும் என நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது. முன்னதாக உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த வாரம் மாநிலங்களவையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. ...
கோவை கோர்சில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாணவர்களுக்கு இடையே திடீரென்று கோஷ்டி மோதல் ஏற்பட்டது .அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.இவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் ...
கோவை மாவட்டம் சிறுமுகை தாளத்துறை அருகே உள்ள ரவி என்பவரது தோட்டத்தில் சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா நேற்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு சட்ட விரோதமாக கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 100 லிட்டர் கள்ளும், காரும் பறிமுதல் செய்யப்பட்டது .இது தொடர்பாக அன்னூர் போகலூர், மேல்கிணறு பகுதியைச் சேர்ந்த அய்யாசாமி ...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பக்கம் உள்ள ஆலடிப்பட்டியை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது 19 வயது மகள் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பாரா மெடிக்கல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார.கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார்.கடந்த 16ஆம் தேதி தனது அக்காள் திருமணத்திற்காக ஊருக்கு சென்றவர்.ஊருக்கு செல்லவில்லை எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவரது ...