கோவை பீளமேடு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு, தமிழ்நாடு அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரியின் www.tnpoly. in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், கல்லூரியின் சேவை மையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இக்கல்லூரியில் பட்டய பாடப் பிரிவில், ஆங்கில வழியில் சிவில் ...

தூத்துக்குடி அண்ணாநகர் 11-வது வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). இவர் கடந்த 2009-ம் ஆண்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பணியில் சேர்ந்தார். மதுரை விமான நிலையத்தில் பணிபுரிந்த அவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவை விமான நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தற்போது விடுப்பில் உள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் ...

புதுடில்லி : மஹாராஷ்டிரா அரசியல் குழப்பம், ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு விசாரணை என, பல நெருக்கடிகளில் காங்கிரஸ் சிக்கித் தவிக்கும் வேளையில், அக்கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா வெளிநாடு சென்றிருப்பதை பா.ஜ., விமர்சித்துள்ளது.மஹாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளதை அடுத்து, அங்கு கூட்டணி ஆட்சி எந்த நேரத்திலும் ...

அரசு நிபந்தனைக்கு மாறாக தள்ளுபடி செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் உட்பட 37,984 பேரின் நகைக்கடன் தள்ளுபடியை ரத்து செய்யுமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 சவரன் வரை வழங்கப்பட்ட நகைக் கடன்களை தள்ளுபடி செய்ய முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து 2021 ...

அதிமுக ஒற்றைத் தலைமை குறித்து அதிமுகவிற்குள் சர்ச்சை நிலவி வரும் நிலையில் நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடியது. ஆனால் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இரு தரப்பினர் இடையேயும் கூச்சல், குழப்பம் நிலவியதால் தொடங்கிய சில மணி நேரத்தில் முடிவடைந்தது. அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் என அதிமுக சபாநாயகர் தமிழ்மகன் ...

கொரோனா பாதிப்பு இந்தியாவில் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. தற்போது தமிழ்நாடு,கேரளா, டெல்லி, கர்நாடகம், , அரியானா, உத்தரபிரதேசம், தெலுங்கானா, உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் 4 மாவட்டங்கள் உள்பட நாட்டின் 43 மாவட்டங்களில் வாராந்திர கொரோனா பாதிப்பு விகிதம் 5 முதல் 10 ...

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று விதி இல்லை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். சென்னை எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஜெயக்குமார். சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- வைத்தியலிங்கம் தேவையற்ற வார்த்தைகளை ரவுடித்தனமாக பேசியுள்ளார். ஆண்டுக்கு ...

சென்னை: தொழில்துறை சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த மாநாட்டில் திருப்பூர், விழுப்புரம் மாவட்டங்களில் ரூ.77 கோடியில் அமையவுள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், சென்னை தரமணி டைடல் பார்க்கில் ரூ.212 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான மையத்தையும் ...

கேரளத்தின் பத்தனம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாகும். இந்த கோவிலுக்கு எல்லா மதத்தினரும் வரவேற்கப்படுகிறார்கள். இது ஆண்டு முழுவதும் திறந்திருப்பதில்லை. இந்த கோவில் மண்டல பூஜை, மகர விளக்கு, விஷூ மற்றும் மலையாள மாதத்தின் முதல் நாட்களில் மட்டும் திறந்திருக்கும். சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் 41 நாட்களுக்கு முன்பிருந்தே பிரம்மச்சரிய விரதம் ...

அரசுப் பள்ளிகளில் தோராயமாக இதுவரை 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்து உள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் 100 சதவீதம் ...