மாநிலத்தின் தலைநகரில் பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மூலம் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு கேள்விகுறியாகி உள்ளது என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்களின் நலன் கருதி மத்திய அரசு பெட்ரோல் ...

காங்கிரஸ் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்த அக்கட்சியின் மூத்தத் தலைவர் கபில் சிபல்(Kapil Sibal) காங்கிரஸில் இருந்து விலகி, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி தலைமையின் மீது அதிருப்தியில் இருந்த அக்கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் ...

பிரதமர் மோடி வருகையால் தமிழ் நாடு வள நாடாக மாறுகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வருவதாகவும், 31,400 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். புதிய தொழில் வளர்ச்சி, ...

தமிழகத்தில் வரும் 2022 – 2023ஆம் கல்வி ஆண்டில் அனைத்துப் பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. வரும் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி மற்றும் பொதுத் தேர்வு தொடங்கும் தேதி குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில், ...

சென்னைக்கு 5 நாள் பயணமாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வந்துள்ளார். தமிழகத்தில் மேற்கொள்ள உள்ள 5 நாள் பயணத்திற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மெய்யநாதன், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் இணைந்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்த 5 நாள் ...

மே 28ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க எடுத்துவரும் முயற்சிகளை எதிர்த்து வங்கி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மே 30, 31 ஆகிய நாட்களில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று வங்கி ...

இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்வோர் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக ஒரே நாளில் 2023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில், போக்குவரத்து போலீஸார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் கடந்த 15 நாட்களில் இருசக்கர வாகன விபத்துகளில் சிக்கி 98 பேர் ...

உச்சநீதிமன்றத்தின் கோடை கால விடுமுறை அமர்வு பட்டியலிடப்பட்ட வழக்குகளை விசாரித்து வருகிறது. அந்த வகையில் இன்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதி டி.ஓய் சந்திரசுட்,பேலா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் ஒருவர் குற்றவாளி என கண்டறியப்பட்டு 2 வார சிறை தண்டனையும், 1 ஆண்டு பயிற்சி செய்ய தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற ...

தலைநகர் டெல்லியில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் 150 மின்சார வாகனத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மக்கள் இலவசமாக பயணிக்கலாம் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் டெல்லி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக மின்சாரத்தில் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவில் ...

இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று டோக்கியோவில் நடைபெறும் குவாட் தலைவர்களின் இரண்டாவது உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.மேலும்,குவாட் உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் ஆஸ்திரேலியாவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதனிடையே,அமெரிக்க அதிபர் ஜோ ...