ராஜஸ்தானில் பெண் டாக்டர் தற்கொலை செய்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாடு முழுவதும் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை புரூக் பாண்ட் ரோட்டில் ரோட்டில் உள்ள ஐஎம்ஏ அலுவலகத்தில் இந்திய மருத்துவ சங்கத்தின் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ...

தமிழ்நாட்டில் 5 நாட்கள் நடந்த அதிரடி சோதனையில் 1.67 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் – 102கடத்தல் வாகனங்கள் பறிமுதல். 3,187 பேர் | கைது.டிஜிபி சைலேந்திரபாபு தகவல், கோவைஏப்2 தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு இன்று காலை 11 மணிக்கு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார்.அங்கு அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. ...

கோவை மாவட்டம் கோவில்பாளையம் அடுத்துள்ள கொண்டயம்பாளையத்தில் வாரி மெடிக்கல் அகாடமி என்ற பெயரில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையம் கடந்த இரு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.இந்த மையத்தின் பொறுப்பு முதல்வராக பிரகாஷ் என்பவரும், முதல்வராக சுகுமார் என்பவர் இருந்து வருகின்றனர். இந்த பயிற்சி மையத்தில் 65 மாணவிகள் உட்பட 130 பேர் பயின்று வருகின்றனர். இம்மையத்தில் ...

கோவை : கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரண உதவி கோரி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கூறியிருப்பதாவது : கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை 5,624 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இதில் 3,778 மனுக்கள் ...

பஞ்சாப், அசாம், திரிபுரா, நாகாலாந்து, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட6 மாநிலங்களில் காலியாகும் 13 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில், நாகாலாந்து, இமாச்சல பிரதேசத்தில் தலா ஒரு உறுப்பினர் பதவியை போட்டியின்றி பாஜக கைப்பற்றியது. அசாமில் 2 உறுப்பினர், திரிபுராவில் ஒரு உறுப்பினர் பதவியை வென்றது. இதனால் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 100 ...

தமிழகத்தில் சொத்து வரி 150 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பதற்கு பாமக இளைஞரணி தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநகராட்சிகள்‌, நகராட்சிகள்‌, பேரூராட்சிகளில்‌ சொத்து வரி 50 சதவீதம் முதல் 150 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உயர்வானது உடனடியாக அமலுக்கு வருகிறது. அதாவது, தமிழகத்தில்‌ உள்ள நகராட்சிகள்‌, பேரூராட்சிகளில்‌ 600 சதுர ...

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் விண்னை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு காரணமாக மக்கள் மண்ணெண்ணையை வாங்க நீண்ட தொலைவிற்கு வரிசையில் நிற்கின்றனர்.இதில் 13 மணி நேர மின்வெட்டு மக்களை முற்றிலுமாக முடக்கியுள்ளது. இதனால் இலங்கை அதிபர் கோத்தபய ...

சென்னை புறநகர் இரயல்களில் பாதுகாப்பிற்காக போலீசார் பயணம் செய்வது போல், இரவு நேர பஸ்களில், போலீசாரை பணியமர்த்தும் திட்டம், விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என்று சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, சென்னை மாநகர போலீஸ் ஆணையர் சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னையில் ஆங்காங்கே சில குற்றச்சம்பங்கள் நடைபெறுகின்றன. அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்றாண்டுகளை ...

அடித்தட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் சொத்துவரி குறைவு எனவும் விளக்கமளித்துள்ளது. சொத்து வரி உயர்வால் அடித்தட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் குடியிருப்புகளின் பரப்பளவை 4 வகைகளாக பிரித்து வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் 1,200 சதுர அடிக்கும் ...

டெல்லி: உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதன் பின் பிரதமர் அலுவலகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் உக்ரைனின் தற்போதைய நிலை குறித்து பிரதமரிடம் ரஷ்ய அமைச்சர் விவரித்ததாக ...