கோவை சுந்தராபுரம் எஸ்.பி. டவர்சில் திருமண தகவல் மையம் நடத்தி வருபவர் நடராஜன் (வயது 67) இவரிடம் டி .பி .கே .நலம் விரும்பி அவரது மனைவி ஆகியோர் 2018 ஆம் ஆண்டு சென்றனர். தங்களுக்கு முதலமைச்சர் ஒதுக்கீட்டில் அரசு வேலை வாங்கி தரமுடியும் என்று கூறினார்கள் . இதை நம்பி நடராஜன் தனது மகனுக்கும் ...
கோவை மாவட்டம், மதுக்கரை அருகே குரும்பபாளையம் பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திறந்துவைத்தார் பின்னர் மதுக்கரை வட்டாரத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாமை தொடங்கி வைத்தார். இதையடுத்து, அவர் செய்தியாளா்களிடம் கூறியதாவது: டிஜிட்டல் எக்ஸ்ரேவுடன் கூடிய வாகனம் ஒன்று கோவைக்கு வழங்கப்பட்டுள்ளது. ...
தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குன்னூர் மற்றும் அதன் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100அடியாகும் இந்த அணையின் நீர் பிடிப்பு பகுதிகளாக கேரள மாநிலம் அட்டப்பாடி,புள்ளி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அப்பர்பவானி ,அவலாஞ்சி,குந்தா போன்றவையாகும் இந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது இதன் ...
குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றன. காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் அவைகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி நடமாடி வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு குன்னூர் அருகேயுள்ள ஜெகதளா குடியிருப்பு பகுதியில் புகுந்த கரடி வீடுகளின் கதவை தட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குன்னூர்- மேட்டுப்பாளையம் ...
கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் பிரபலமான ஜூவல்லரி உள்ளது. இங்கு நேற்று நகைகளை ஊழியர்கள் ஆய்வு செய்தபோது சுமார் 3 கிராம் எடையிலான ரூ.12 ஆயிரம் மதிப்பிலான தங்க கம்மல் திருடு போனது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இது குறித்து மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். அவர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். ...
கோவை வெள்ளலூர் ரயில்வே காலனியை சேர்ந்தவர் சண்முகம்(62). ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர் நேற்று பள்ளியில் படிக்கும் தனது பேரனை அழைத்து வர சென்றார். அப்போது அவர் வெள்ளலூர் ரோடு மகாலிங்கபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கிருந்த வாலிபர் ஒருவர் அந்த வழியாக செல்லும் இளம்பெண்களை கேலி, கிண்டல் செய்து ...
நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பங்களாவில் 4 ஆண்டிற்கு முன் கொள்ளை நடந்தது. இதை தடுக்க முயன்ற எஸ்டேட் செக்யூரிட்டி கொலை செய்யப்பட்டார். எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரத்தில் சயான், மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சசிகலாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதுவரை 230க்கும் மேற்பட்டவர்களிடம் ...
இந்தியாவில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி 2014 நாடாளுமன்ற தேர்தல் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியில் இருந்து இன்னும் காங்கிரஸ் கட்சியால் எழுந்திருக்க முடியாமல் உள்ளது. தங்கள் கைவசம் இருந்த 20க்கும் மேற்பட்ட மாநிலங்களையும் காங்கிரஸ் கட்சி இழந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சியை இழந்துள்ளதால் நாடு முழுவதும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் ...
சென்னை வள்ளுவர் கோட்டம் 30 கோடி ரூபாய் செலவில் நவீன முறையில் விரைவில் சீரமைப்பு செய்யப்படும் என செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எழிலன் உள்ளிட்டோர் வள்ளுவர் கோட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள சீரமைப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ...