கோவை மாவட்டத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சோலையாறு அணையின் மொத்த நீர்மட்டம் 165 அடி தற்போது அணையின் நீர் மட்டம் 134.4 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4036 கன ...
கோவையில் பெண் இயக்குநரை மிரட்டிய அதிரடி சரஸ்வதி அதிரடி கைது.. திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை இயக்கிய `செங்கடல்’, `மாடத்தி’ படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள ‘காளி’ எனும் ஆவண படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் காளி வேடத்தில் பெண் புகை பிடிப்பது போல் ...
கோவை ரத்தினபுரி அருகே உள்ள ஆறுமுக கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் பூபாலன் வயது 27 கட்டிட தொழிலாளி இவரது மனைவி ஷாலினி 25. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது நேற்று இரவு மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது இதில் ஆத்திரம் ...
கோவை கருமத்தம்பட்டி தனிப்படை போலீசாருக்கு சோமனூர் ரெயில்வே கேட் பகுதியில் கஞ்சா விற்பதாக இன்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 3 வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமாக நின்று இருந்தனர். அவர்களை போலீசார் விரைந்து சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் ...
கோவை சிங்காநல்லூர் நீலி கோணாம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்சுந்தர் என்கிற மோனி(வயது 22). இவர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது அடிதடி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவர் தொடர் குற்ற செயலில் ஈடுபட்டு வந்ததால் சிங்காநல்லூர் போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ...
கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் அதிமுக இளைஞரணியில் கோவை மாவட்ட துணைச் செயலாளராக இருந்து வருகிறார். மேலும் நமது அம்மா நாளிதழின் வெளியிட்டாளராகவும் இருந்து வருகிறார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவராக அறியப்படும், இவர் கடந்த அதிமுக ஆட்சிக் காலங்களில் பல்வேறு அரசு ஒப்பந்தங்களை எடுத்து செய்துள்ளார். இவரது மனைவி சர்மிளா சந்திரசேகர் ...
தகுதியான பேராசிரியர்கள் இல்லாதது, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது குறித்து விளக்கமளிக்கக் கோரி அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2 வாரங்களில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய விளக்கமளிக்காவிட்டால் அங்கீகார நீட்டிப்பு வழங்கப்படாது ; மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி வழங்கப்படாது என்று அண்ணா பல்லலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 476 பொறியியல் கல்லூரிகளை ...
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை முதல் சென்னை கோபாலபுரம் வரை பாதயாத்திரை போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்ற என்று வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் பாஜக உண்ணாவிரத போராட்டம் நடத்தியது சென்னை வள்ளுவர் ...
பொதுவாக சமையல்,வணிக கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.அதன்படி,கடந்த ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.3 அதிகரித்து ரூ.1018.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில்,சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை மேலும் ரூ.50 அதிகரித்து ரூ.1068.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை அதிகரிப்பு ஏழை மற்றும் ...
தமிழக முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் காதி பொருள்கள்,அரசு உப்பு மற்றும் பனைவெல்லம் விற்கும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சில நிபதனைகள் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும். அதன்படி ஒரு மாதத்தில் சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் ...