கோவை ஜூலை 2 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பக்கம் உள்ளஅரசனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி.இவரது மகன் கார்த்திக் (வயது 32 )இவர் கோவையில் உணவு சப்ளையராக (சுவிகி)வேலை பார்த்து வந்தார்.கோவை காந்திபுரம்- சத்தி ரோட்டில் பைக் சென்று கொண்டிருந்தார் .ஆம்னி பஸ் நிலையம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் இவர் மீது ...

கோவை ராமநாதபுரம், புலியகுளம் பெரியார் நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் கணேஷ் குமார் ( வயது 30) இவர் நேற்று தனது மனைவியுடன் அங்குள்ள வங்கியில் நகையை அடகு வைத்து ரூ2 லட்சத்து 80 ஆயிரம் கடன் வாங்கி வந்தார் .அந்தப் பணத்தை இருசக்கர வாகனத்தில் வைத்திருந்தார். நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள ஒரு பங்கில் ...

கோவை கிணத்துக்கடவு சேரன் நகரை சேர்ந்தவர் அரவிந்த் பிரான்சிஸ் (வயது 27). கூலி தொழிலாளி. இவர் கடந்த 5 வருடத்துக்கு முன்பு சங்கவி (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் அரவிந்த் பிரான்சிசுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ...

கோவையில் கடந்த ஆண்டில் 4 ஆயிரத்துக்கும் அதிமாக இருந்த கொரோனா நோய்த் தொற்று, கடந்த சில மாதங்களாக படிப்படியாகக் குறைந்து 10-க்கும்கீழ் வந்தது. உயர தொடங்கியது இந்நிலையில், மாநகரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கொரோனா நோய்த் தொற்று கணிசமாக உயா்ந்து வருகிறது. தமிழகத்தில், கடந்த மாதங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்ட மாவட்டங்களில் சென்னைக்கு ...

நீலகிரி கொலக்கம்பையை சேர்ந்தவர் சாரிகா (வயது 19). இவர் கோவை மதுக்கரையில் விடுதியில் தங்கி அங்குள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை கல்லூரி முடிந்து தனது தோழியுடன் பொள்ளாச்சி- கோவை ரோட்டில் விடுதிக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட சமயபுரம், நெல்லித்துரை, குரும்பனூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு அருகிலும் விளைநிலங்களிலும் புகுந்து வருகிறது. இதில் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி சாலையில் சமயபுரம் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த சமயபுரம் கிராமப் பகுதியின் சாலை வழியாக காட்டு ...

வடகிழக்கு மாநிலங்களில் பெய்துவரும் மழை, நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் கோவை – சில்சாா், திருவனந்தபுரம் – சில்சாா் ஆகிய 2 ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை – சில்சாா் வாராந்திர ரெயில் (எண்: 12515) ஜூலை 3, 10 ...

ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி அருகே உள்ள ஓடந்துறையை சேர்ந்தவர் ராஜூ போயன் (வயது 76). இவர் 2016-ம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜெயிலில் இருந்த ராஜூ போயனுக்கு கடந்த 25-ந் தேதி திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை பார்த்த ...

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஓபிஎஸ்- இபிஎஸ் என இரு பிரிவாக அதிமுக பிரிந்துள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தீர்மானத்திற்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காத காரணத்தால் அந்த பதவி தற்போது இல்லையென இபிஎஸ் தரப்பு கூறி வருகிறது. ...

அனுமதியின்றி காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததாக வேலூர் மாநகர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே.அப்பு மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்வே மேம்பால பணிகள் நிறைவடைந்து இன்று முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் ...