எப்போதுமே ஆஸ்திரேலிய ஓபன் தொடர் பரபரப்பாக இருக்கும். ஆனால் இந்தாண்டு நடைபெற்ற வழக்கத்திற்கு மாறாக தொடர் ஆரம்பாகும் முன்பே பரபரப்பாக பேசப்பட்டது. காரணம் உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் ஜோகோவிச். ஓபன் தொடரில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் என அனைவருமே கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தவில்லை. அதன் ...

புதுடில்லி : ‘வேலுார் சி.எம்.சி., கல்லுாரி முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில், 70 சதவீதத்தை, ‘நீட்’ மதிப்பெண் அடிப்படையில் தமிழக அரசு அளிக்கும் பட்டியலில் உள்ள கிறிஸ்தவ சிறுபான்மை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலுார் சி.எம்.சி., கல்லுாரி நிர்வாகம், 2021-22ம் கல்வியாண்டு முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில், தமிழக அரசு அளித்த ...

தஞ்சாவூரில் திமுக முன்னாள் கவுன்சிலர் ஒருவர் ஆக்கிரமித்துள்ள கட்டடங்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கியது மட்டுமின்றி அவரிடம் இருந்து சுமார் 100 கோடி மதிப்பிலான சொத்துக்களை மீட்டுள்ளனர். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் மாநகராட்சி சொந்தமான சுதர்சன சபா அமைந்துள்ளது. இந்த சபாவில் ஆன்மிக சொற்பொழிவு, புத்தக வெளியீடு உள்ளிட்டவை நடைபெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ...

டாஸ்மாக் சில்லறை விற்பனை விதிகளில் திருத்தம் செய்யப்பட்ட உள்ளதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு, திறந்த கடையை மூடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு அல்லது கிராமசபை தீர்மானம் நிறைவேற்றினால், அதை மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்யும் வகையில், மதுபான சில்லரை விற்பனை விதிகளில் திருத்தம் செய்யப்பட ...

தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டு மூலம் மிகவும் பிரபலமாக இருந்தவர் பப்ஜி மதன். ஆன்லைன் விளையாட்டின் போது சிறுவர்களிடம் ஆபாசமாக பேசியதுடன், அவர்களை ஏமாற்றி பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, விசாரணை மேற்கொண்ட போலீசார், பண மோசடியில் ஈடுபட்ட பப்ஜி மதனை கைது செய்தனர். தற்போது சென்னை, புழல் சிறையில் பப்ஜி மதன் ...

சென்னை: தனியார் மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் கட்டண வசூல் தொடர்பாக கண்காணிக்க தனி குழுக்கள் நியமிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் தெரிவித்த்திருக்கிறார். அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீதான ...

சென்னை: 45வது புத்தகக் கண்காட்சி பிப்ரவரி16ந்தேதி தொடங்குகிறது. இந்த கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கொரோனா கட்டுப்பாடுகளால் ஒத்திவைக்கப்பட்ட புத்தகக்காட்சி, கொரோனா ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக, பிப்ரவரி 16 ந்தேதி தொடங்குகிறது. மார்ச் 3 வரை 16 நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியான காலை 11 மணிமுதல் இரவு 8 ...

நாடாளுமன்றத்தில் யூடியூப் சேனலான சன்சத் டிவி, இன்று அதிகாலை முடக்கப்பட்டு சிறிது நேரத்தில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை நிகழ்வுகளை நேரலை செய்வதற்காக சன்சத் டிவி என்ற யூடியூப் சேனல் கடந்தாண்டு ஆரம்பிக்கப்பட்டது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் இல்லாத நாள்களில் அரசு சார்ந்த நிகழ்வுகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சன்சத் டிவி வெளியிட்டுள்ள செய்திக் ...

சமூக வலைதளங்கள் மூலம் குற்றங்கள் அதிகரித்து வருவதால் அதனை தடுக்கும் வகையில் சவுதி அரேபியா அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் வாட்ஸ்ஆப் செயலியில் சிவப்பு நிற குறியீடான ஹார்ட் இமேஜியை அனுப்பி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தால் அந்த நபருக்கு இரண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...

மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான 4 வழக்குகளில் தண்டிக்கப்பட்ட தண்டிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ், தற்போது மேலும் ஒரு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். தோரணாடா கருவூலத்திலிருந்து 139 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. லாலு பிரசாத் யாதவ், மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு ...