சென்னை துறைமுகத்தில் இருந்து நாளை மாலை 5 மணிக்கு இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி மக்கள் போராட்டங்கள் நடத்தியதால் இலங்கை கலவர பூமியாக மாறியது. இந்நிலையில் இலங்கை மக்களுக்கு உதவ தமிழக ...

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச மீது செவ்வாய்க்கிழமை கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது. இலங்கை பொருளாதாரத்தை முறையாக வழிநடத்தத் தவறியதால், அதிபா் பதவியை கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்யக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, பிரதமராகப் பதவி வகித்து வந்த மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்ததையடுத்து, அதிபா் ...

டெல்லி : நாட்டிலேயே முதல்முறையாக நீருக்கடியில் ரயில் மற்றும் வாகன போக்குவரத்துக்கான சுரங்கப் பாதைகள் அசாமின் பிரம்மபுத்திரா நதியில் அமைக்கப்பட உள்ளது. நெடுஞ்சாலை, ரயில்வே மற்றும் எல்லையோர சாலைகளுக்கான துறைகள் இணைந்து சுமார் ரூ. 7,000 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். பாதுகாப்புத் துறை சார்பிலும் நீருக்கடியிலான சுரங்கப் பாதைக்கு நிதி வழங்கும்படி ...

கோவை மாநகரில் மத்திய அரசின் திட்டத்தின் மூலம் 9 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலமாக கேஸ் விநியோகம் செய்யும் ஏற்பாடாக எரிவாயு இருப்பு வைக்கும் ‘சிட்டி கேஸ் ஸ்டேஷன்’ கட்டுமானப்பணி முடிவு பெற்று திறக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 9 லட்சத்து 12 ஆயிரத்து 783 வீடுகளுக்கு குழாய் மூலமாக சமையல் எரிவாயு விநியோகிக்கும் திட்டத்திற்கு மத்திய ...

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட ராஜவீதி, உக்கடம் பேருந்து நிலையம், காந்திபுரம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதால் 1586 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகளால் மொத்தம் ரூ.14700/- ...

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் திருப்பூர், அவினாசி, கோவை அரசு , மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து புதிய குழந்தைகளுக்கான அதிநவீன சிகிச்சை பிரிவு, கொரோனா ஐ.சி.யு பிரிவு, இருதய நோய் பிரிவு உள்ளிட்ட அவசர சிகிச்சை பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ...

சேலம் மாவட்டம் வீரபாண்டி இந்தியன் வங்கிக் கிளையில் கடந்த 2010 ஆண்டு உயிரி உரங்கள் தயாரிக்கும் சன் பயோமினியூர் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் போலி ஆவணங்களை கொடுத்து ரூ.2.65 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். இது குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. மேலும் இந்த வழக்கு விசாரணை ...

பாரதியார் பல்கலைகழகத்தில் இன்று 37 வது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றுள்ளது. படித்து முடித்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கும் இந்த நிகழ்வு குறித்து செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக வீடியோ காட்சிகளும், புகைபடங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கின்றது. பல்கலை கழக நிர்வாகத்தின் இந்த செயல்பாடுகளை கோயமுத்தூர் ...

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்றுடன் அனைத்து தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட உள்ளது. இருப்பினும் மே 20ஆம் தேதி வரை ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் எதுவும் செயல்படவில்லை. ...

வடகோவை – பீளமேடு ரெயில்வே தண்டவாளம் டெக்ஸ்டூல் அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்த முதியவரின் உடலை சோதனை செய்தனர். அவர் ஸ்வெட்டர் ...