புதுடெல்லி:இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான (இஸ்ரோ), செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் மங்கள்யான் திட்டத்தை நிறைவேற்றியது. சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் சந்திரயான்-1, சந்திரயான்-2 திட்டங்களையும் மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து, வெள்ளி கிரகத்தின் மீது இஸ்ரோவின் பார்வை பதிந்துள்ளது. வெள்ளி கிரகத்தை ஆராய்ச்சி செய்ய விண்கலம் அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசுகையில், ”வெள்ளி ...
சென்னை: இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவர் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இது குறித்து திமுகவின் கட்சித் தலைமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இலங்கை மக்களுக்கு ...
செயற்கைக் கோள்களை விண்ணில் நிலைநிறுத்திவிட்டு திரும்பிய ராக்கெட்டை நடுவானில், ஹெலிகாப்டர்கள் மூலம் பிடித்து நியூசிலாந்தைச் சேர்ந்த தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சாதனை படைத்துள்ளது செயற்கைக் கோள்களை விண்ணில் நிலைநிறுத்திவிட்டு திரும்பிய ராக்கெட்டை நடுவானில், ஹெலிகாப்டர்கள் மூலம் பிடித்து நியூசிலாந்தைச் சேர்ந்த தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சாதனை படைத்துள்ளது. ராக்கெட் லேப் என்ற நிறுவனத்தின் ...
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பிரதமரையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து முறையிட உள்ளதாக மதுரை ஆதீனம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை களிமேடு பகுதியில் கடந்த 27 ஆம் தேதி அப்பர் சப்பரத்தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று களிமேடு பகுதிக்குச் ...
தமிழகம் முழுவதும் இன்று (புதன்கிழமை) பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை நடக்கிறது. கோவை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 35,033 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக 119 தேர்வு மையங்கள் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டு உள்ளது. பறக்கும் படை இதுதவிர 2,047 தனித்தேர்வர்களும் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதற்காக 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு ...
கரோனா வைரஸின் எக்ஸ்.இ திரிபு இந்தியாவில் ஒருவருக்குக் கண்டறியப்பட்டிருப்பதாக, மத்திய சுகாதாரத் துறையின் ஆய்வு அமைப்பான இன்ஸாகாக் (The Indian SARS-CoV-2 Genomics Consortium) அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஏப்ரல் 25-ம் தேதியிட்ட அந்த அறிக்கை நேற்று (மே 4) வெளியானது. எனினும், தொற்றுக்குள்ளானவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் எனும் தகவல்கள் அதில் குறிப்பிடப்படவில்லை. ‘கடந்த வாரத்தை ...
1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து தலைமை செயலகத்தில் முதல்வருடன் பள்ளி கல்வித் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை ...
`வாதிடுவதற்கு மத்திய அரசிடம் வேறு எந்த விஷயமும் இல்லை என்றால், பேரறிவாளனை நாங்களே விடுதலை செய்வோம்’ என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக கூறி உள்ளனர். பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ் , கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. இன்றைய வழக்கு விசாரணை நடைபெற்ற போது மத்திய ...
ஆனைமலை: ஆனைமலை அருகே உள்ள கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள் (55). கோட்டூர் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, மரத்தின்மீது சிறுத்தை ஒன்று இருப்பதை கண்டு பீதியடைந்துள்ளார். இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் தோட்டத்து உரிமையாளர் கோட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ...
நீட் விலக்கு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற ஆளுனர், உள்துறை அமைச்சகத்திற்கு மசோதாவை அனுப்பியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில், சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ...