சென்னை: தெருவில் கட்சிக் கொடி கட்டிக்கொண்டிருந்த தன்னை இன்று தேசியக் கொடி கட்டிய காரில் பவனி வர வைத்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் என அமைச்சர் சேகர்பாபு உருக்கமுடன் தெரிவித்தார். மேலும், மூலவரும் முதலமைச்சர் ஸ்டாலின் தான் உற்சவரும் முதலமைச்சர் ஸ்டாலின் தான் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகளை ...
சென்னை: அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் 60 % பங்கு தொகை தரப்பட்டும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்க சிறப்பு கட்டணச்சீட்டுகள் அறிமுகம் செய்யப்படும் என இந்து சமைய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபா தெரிவித்துள்ளார். ...
தமிழக சுகாதாரத்துறை சார்பில் கோடை காலத்தில் செய்ய வேண்டிய நடைமுறைகள் தொடர்பான தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாம் என்ன செய்ய வேண்டும்? *அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். *பயணத்தின் போது தண்ணீரை எடுத்துச் செல்ல வேண்டும். *ஓஆர்எஸ், எலுமிச்சைச் சாறு, இளநீர், பழச்சாறு அருந்த வேண்டும். *முடிந்தவரை வீட்டுக்குள் இருக்க வேண்டும். *காற்றோட்டம் உள்ள ...
டெல்லி : இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு நிவாரண பொருட்களை வழங்க அனுமதி அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு தமிழக அரசு உதவிப் பொருட்களை வழங்க கடந்த ஏப்ரல் 13ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ...
நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் மின் பற்றாக்குறை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை. நாடு முழுவதும் நிலவும் நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் மின் பற்றாக்குறை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் மின்துறை அமைச்சர் ஆர்கே சிங், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் ...
கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நேற்று சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இந்நிலையில், ஸ்ரீரங்கப்பட்டினத்தில் காற்றுடன் ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளது. இந்த பலத்த மழையில் அங்குள்ள கனரா வங்கி அருகே உள்ள மரம் வேருடன் முறிந்து விழுந்துள்ளது. இந்த மரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளிகள் வசித்துவந்த நிலையில், அவை கிளையில் சிக்கி பறந்த ...
சிப் பற்றாக்குறையால் ஏப்ரல் மாதத்தில் ஒரு வாகனம் கூட தயாரிக்கவில்லை என ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே இருந்த சிப் பற்றாக்குறை தற்போது உச்சத்தை அடைந்திருப்பதாக ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்களின் காத்திருக்கும் காலம் 60 நாட்களுக்கு மேல் ஆகிறது. தவிர சில டீலர்களிடம் வாகனங்களே இல்லை என்னும் ...
சென்னை : சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை இருக்கக்கூடிய கிழக்கு கடற்கரை சாலை (ஈ.சி.ஆர். சாலை) இனி முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என பெயர் சூட்டப்படும் என்று என நெடுஞ்சாலைத்துறையின் 75-வது ஆண்டு பவள விழாவில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக நெடுஞ்சாலைத்துறையின் 75வது ஆண்டு பவள விழா சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ...
தற்பொழுது பெட்ரோல் டீசல் விலைகள் அதிகமாக இருப்பதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்கள். மீண்டும் பழைய நிலைமைக்கு வந்து விடுமோ? என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடம் உள்ளது. வீட்டிற்கு வாகனங்களும் ஆட்களுக்கு இணையாக இருப்பதும் இதில் உள்ள முக்கிய விஷயம். ஒரு வீட்டிற்கு உருவாகும் என்று நிலை இப்போது ஒரு வீட்டிற்கு ...
உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மசூதிகள் மற்றும் சில மத வழிபாட்டுத் தலங்களில் அதிக அளவில் இரைச்சலுடன் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறி கடந்த சில நாட்களாகவே சில சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வரின் அனுமதி இன்றி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் அனைத்தும் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஒலிபெருகிகளுக்கான ஒலி அளவு குறித்தும் ...