சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காவலர் வீட்டு வசதி வாரிய கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உள்துறை சார்பில் 66 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 274 காவலர் குடியிருப்புகள், 11 காவல் நிலையங்கள், 3 காவல்துறை கட்டிடங்கள், 18 சிறைகள், சீர்திருத்தத்துறை பணியாளர்களுக்கான குடியிருப்புகள், 58 தீயணைப்பு மற்றும் ...
தமிழக நிதியமைச்சரின் திட்டத்தினால் முதல்வர் மகிழ்ச்சியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் இருக்கிறார். இவர் நீதித்துறையில் மிகவும் கண்டிப்புடன் இருக்கிறார். இவர் பட்ஜெட் தாக்கலின் போது தமிழ்நாடு மாநில தணிக்கை குழு என்ற அமைப்பு உருவாக்கப்படும் என அறிவித்திருந்தார். அதாவது இந்திய அரசு துறைகளின் கணக்குகளை தணிக்கை செய்வதற்கு சிஏஜி என்ற ...
சென்னை: சென்னையின் அடையாளகங்களில் ஒன்றான மெரினா கடற்கடையில் இருக்கும் கலங்கரை விளக்கம் காட்சி முனையாகவும் திகழ்கிறது .கலங்கரை விளக்கம் இருக்கும் பகுதியில் ட்ரான் கேமரா பறக்க தடை விதிக்கபட்டுள்ளது.மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலங்கரை விளக்கம் கட்டிடத்தை ‘ட்ரோன் கேமரா’ மூலம் படம் பிடித்ததாக ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த பொறியாளர் உட்பட 2 பேரை போலீசார் பிடித்து ...
தமிழ் புத்தாண்டு மற்றும் புனிதவெள்ளியை ஒட்டி, பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவிடுவது வழக்கம். தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட ...
தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் இன்று பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர், தமிழகத்தில் ரூ.166.50 கோடியில் புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மணப்பாறை, செஞ்சி, திருமயம், அந்தியூர், அரவக்குறிச்சி, திருக்காட்டுப்பள்ளி, ரெட்டியார்சத்திரம், வடலூர், ஸ்ரீபெரும்புதூரில் புதிய ...
டெல்லி: பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனை ஆதரித்து 174 எம்பி.க்கள் வாக்களித்தனர். இதையடுத்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் ஆளும், எதிர்க்கட்சிகள் தரப்பில் நடத்தப்பட்டது. இதில் பாகிஸ்தான் ...
காஷ்மீர்,லடாக்கில் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையான ‘ஹெலினா’ ஹெலிகாப்டரில் இருந்து ஏவி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) ஆகியவற்றின் விஞ்ஞானிகளின் குழுக்கள் கூட்டாக இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஹெலினா ஏவுகணையானது டிஆர்டிஓவின் ஏவுகணைகள் மற்றும் வியூக அமைப்புகள் (எம்எஸ்எஸ்) கிளஸ்டரின் கீழ் ...
தஞ்சாவூரை சேர்ந்த பிரபல ரெளடி ராஜாவுக்கு மரண தண்டனை விதித்து கும்பகோணம் அமர்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. ராஜா என்ற கட்ட ராஜா மீது 10க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்த நிலையில், கைது செய்யப்பட்டு கும்பகோணம் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்குகள் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி இன்று ...
சென்னை: ஆன்லைன் விசாரணையின்போது பெண்ணிடம் ஆபாசமாக நடந்துகொண்ட வழக்கறிஞருக்கு 2 வாரங்கள் சிறை தண்டனை, ரூ.6,000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக வழக்கு விசாரணை நடைபெற்ற போது நீதிபதி ஒருவர் உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் தன்னுடைய கேமரா ஆனில் இருந்தது தெரியாமல் வழக்கறிஞர் ஒருவர் ...
தமிழக சட்டப்பேரவையில் நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார். பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களின் உணவு பழக்கவழக்கங்களை பாதுகாக்க வேண்டி இந்த கேழ்வரகு வழங்கும் திட்டம் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் 50 ...