குளித்தலை எம்எல்ஏ மாணிக்கத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் திமுகவில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்தவர் மாணிக்கம். 62 வயதான இவர் கரூரைச் சேர்ந்த ராஜம்மாள் என்பவரிடம் கடந்த ஆண்டு 9 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்தும் விதமாக மாணிக்கம், வங்கி காசோலை ...
கோவை மாவட்ட வளா்ச்சிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் என்றும் உறுதுணையாக இருப்பாா் என்று மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி, தனது ட்விட்டா் பக்கத்தில் தெரிவித்துள்ளாா். கோவையில் மாநகராட்சித் தோதல் முடிவுகள் கடந்த 22 ஆம் தேதி வெளியான நிலையில், 100 வாா்டுகளில் 96 வாா்டுகளை திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கைப்பற்றியது. இதன் மூலம், திமுகவைச் ...
தமிழகத்தில் திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் ஆயத்த ஆடை மற்றும் பின்னலாடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குகிறது. அதோடு மட்டுமில்லாமல் விசைத்தறிகள் இந்த மாவட்டங்களில் அதிகமாக செயல்படுகிறது. இந்த மாவட்டங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஒரு தொழில் நகரமாக உள்ளன. இந்த மாவட்டங்களில் இருந்து துணிகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் அதிக ...
சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில், காலையும் மாலையும் ஆறு மணிநேரத்திற்கும் மேலாக நின்றுகொண்டே, உள்ளாட்சி நகர்ப்புற தேர்தலில் வென்ற மக்கள் பிரதிநிதிகளையும், அவர்களது உறவினர்கள் மற்றும் வெற்றிக்காக உழைத்த தொண்டர்களையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: முப்பதுக்கும் மேற்பட்ட ...
தமிழ்நாட்டில் 2000-01ஆம் ஆண்டுகள் முதல் நடைபெற்று வரும் தாது மணல் கொள்ளை குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட கடலோரப் பகுதிகளில் தாது மணல் கொள்ளை தொடர்பாக கடந்த 2015ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த ...
பர்கினோ பாசோவில் தங்கச் சுரங்கத்தில் வெடி விபத்து ஏற்பட்டதில் 63 பேர் பலியாகியுள்ளனர். பர்கினோ பாசோ என்ற மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் இருக்கும் பொனி மாகாணத்தின் பொம்ப்லோரா நகரில் அமைந்துள்ள மிகப்பெரிய தங்க சுரங்கத்தில் தங்கம் எடுக்கும் பணி நடந்திருக்கிறது. அப்போது அங்கிருக்கும் வெடி, திடீரென்று வெடித்து சிதறியது. இதில், 63 பணியாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ...
சேலம்: சேலம் மாநகராட்சி தேர்தலில், 4.53 சதவீத ஓட்டுகளை பெற்ற பா.ஜ., மூன்றாம் இடம் பிடித்ததால், முன்னணி கட்சியினர், ‘ஷாக்’ அடைந்தனர்.தமிழகத்தில் சில ஆண்டாக பா.ஜ., வளர்ச்சி குறித்து பலராலும் விமர்சிக்கப்பட்டது. கூட்டணி அமைத்தே போட்டியிட்டதால், பிரதான கட்சிகளும், கடந்த காலங்களில் வாங்கிய ஓட்டுகளை வைத்து அலட்சியம் செய்தன. வளர்ச்சிக்கேற்ப இடங்கள் கிடைக்காததால், பா.ஜ., தனித்து ...
மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க காரணமே அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள்தான் என்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள். 1991-ல் சோவியத் ஒன்றியம் என்கிற ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளின் கூட்டமைப்பு சிதறிப் போனது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் உள்ளிட்டவை சுதந்திர நாடுகளாகின. உலக அரசியல் வரலாறானது அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் என்ற இரண்டு ...
மாஸ்கோ: உக்ரைன் நாட்டின் மீது உக்கிரமான படையெடுப்பை நிகழ்த்தி வருகிறது ரஷ்யா. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையானது மூன்றாவது உலக யுத்தத்தை மூளச் செய்யுமா? என்கிற பேரச்சமும் எழுந்துள்ளது. ரஷ்ய பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ எனப்படும் கூட்டமைப்பின் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதனை ரஷ்யா தொடக்கம் முதல் எதிர்த்து வருகிறது. அண்டை நாடான ...
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கச் சென்ற இந்திய விமானம் நடுவானிலேயே பாதியில் திரும்பியது. உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்களை ரஷ்ய படைகள் தாக்கத் தொடங்கியுள்ளன. உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டுமழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீதும் ரஷ்ய ...