சென்னையில் இருக்கும் மாநகர பேருந்துகளில் பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், கண்டக்டர்-பயணிகளுக்கும் இடையே நடக்கும் வாக்குவதங்களை தடுக்கவும் முதல் கட்டமாக 500 பஸ்களில் பேனிக் பட்டன், சிசிடிவி கேமராக்களை மாநகர போக்குவரத்து கழகம் நிறுவி உள்ளது. எனவே இனிமேல் பிரச்சனை இல்லாமல் பயணம் செய்ய முடியும். குறிப்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் 25 பணிமனைகள் மூலம் ...

இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவை தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதோடு 13 மணி நேர மின்வெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு இலங்கையில் ...

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துள்ள இம்ரான்கான் தன் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்வேன் என்று அறிவித்து இருந்தார். இந்நிலையில், சற்றுமுன் பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்ற துணை சபாநாயகர் நிராகரித்து ...

சென்னை : கொரோனா தொடர்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை இனி பின்பற்ற வேண்டிய அவசியமில்லை எனவும், அதே நேரத்தில் தடுப்பூசி, முகக்கவசம், தனிமனித இடைவெளி ஆகியவை சுய விருப்பத்தின் அடிப்படையில் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு சீனாவின் வூகான் மாநிலத்தல் கண்டறியப்பட்ட கோவிட் – 19 எனப்படும் ...

இளையராஜாவுக்கு சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த பின்னணி இசைக்கான விருது ‘ஏ ப்யூட்டிஃபுல் ப்ரேக்-அப்’ படத்திற்கு இசையமைத்ததற்காக கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்கள் இதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். தனது தம்பி கங்கைஅமரனுடன் சேர்ந்து மீண்டும் பணியாற்றுகிறார் இளையராஜா. அடுத்தடுத்து அவரிடம் பல மாற்றங்கள். வெங்கட் பிரபு ...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அப்போது அவர்கள் அனைவரும் உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். அதனைப்போலவே வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக முடிகாணிக்கை செலுத்தி வருகிறார்கள். கொரோனா காரணமாக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பிறகு கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினந்தோறும் சுவாமி ...

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறை 1 முதல் 5ம் வகுப்பு வரை இறுதி தேர்வு நடைபெறாது என அறிவித்துள்ளதாக நேற்று செய்திகள் பரவின. மேலும், ‘ஆறு முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கு மே மாதம் 5 முதல் 13ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். அதேபோல் ஒன்பதாம் வகுப்புக்கான செய்முறை தேர்வு மே மாதம் 2ம் ...

ராஜஸ்தானில் பெண் டாக்டர் தற்கொலை செய்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாடு முழுவதும் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை புரூக் பாண்ட் ரோட்டில் ரோட்டில் உள்ள ஐஎம்ஏ அலுவலகத்தில் இந்திய மருத்துவ சங்கத்தின் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ...

தமிழ்நாட்டில் 5 நாட்கள் நடந்த அதிரடி சோதனையில் 1.67 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் – 102கடத்தல் வாகனங்கள் பறிமுதல். 3,187 பேர் | கைது.டிஜிபி சைலேந்திரபாபு தகவல், கோவைஏப்2 தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு இன்று காலை 11 மணிக்கு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார்.அங்கு அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. ...

கோவை மாவட்டம் கோவில்பாளையம் அடுத்துள்ள கொண்டயம்பாளையத்தில் வாரி மெடிக்கல் அகாடமி என்ற பெயரில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையம் கடந்த இரு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.இந்த மையத்தின் பொறுப்பு முதல்வராக பிரகாஷ் என்பவரும், முதல்வராக சுகுமார் என்பவர் இருந்து வருகின்றனர். இந்த பயிற்சி மையத்தில் 65 மாணவிகள் உட்பட 130 பேர் பயின்று வருகின்றனர். இம்மையத்தில் ...