பிரபல குத்துச்சண்டை வீரரான தி கிரேட் காளி பாஜகவில் இணைந்தார். பிரபல WWE குத்துச்சண்டை வீரரான தலிப் சிங் ரானா என்று அழைக்கப்படும் தி கிரேட் காளி பாஜகவில் இணைந்து உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் முன்னேற்றத்துக்கான பிரதமர் மோடியின் பணிகளுக்கு எனது பங்களிப்பையும் வழங்கவே பாஜகவில் இணைந்ததேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவின் கொள்கைகளும் ...
தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு அரசுக்கு வரியினங்கள் செலுத்தாமல் தங்கம், வெள்ளி நகைகளை கடத்தும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை வணிக வரித்துறை அதிகாரிகள் கண்காணித்து மடக்கி பிடித்து வருகின்றனர். சாலை மார்க்கமாக தங்கம், வெள்ளி நகைகளை எடுத்துச்சென்றால், சோதனையில் பிடிபட நேரிடுகிறது என்பதால் ரயில்களில் கடத்திச் செல்லும் சம்பவங்கள் அதிகளவு நடைபெற்றுவருகிறது. இதனை கண்காணித்து பிடிக்கும் ...
சென்னை:தி.நகரில் உள்ள பாஜக அலுவலகம் மீது 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது தொடர்பாக வினோத் என்பவர் கைது. சென்னை தியாகராய நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலரால் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,அக்கட்சி தலைமை அலுவலகத்தில் ...
சமூக நீதியை பத்தி பேசிட்டு திருமாவளவன் போட்டோவை கோவை மண்டலத்தில் ஏன் போடவில்லை?” தி.மு.க’விற்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது, “கோவை மண்டலத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு எல்லா தலைவர்கள் படத்தையும் போட்டீங்க! எங்க அண்ணன் திருமாவளவன் படத்தை போட்டிங்களா? அவரோடு சிதம்பரத்தில் ஓட்டு கேட்க மட்டும் தான் யூஸ் ...
கோவை: கோவை கோனியம்மன் கோயில் தேரோட்டம் அடுத்த மாதம் 2ம் தேதி நடக்கிறது. கோவையின் காவல் தெய்வமான பெரியகடை வீதி கோனியம்மன் கோயில் தேர்திருவிழா தேர் முகூர்த்தக்கால் நடும் விழாவுடன் வரும் 14ம் தேதி துவங்குகிறது. இதனை தொடர்ந்து 15ம் தேதி இரவு 7.30 மணிக்கு பூச்சாட்டு விழாவுடன் தேர் திருவிழா நடக்கிறது. இதையடுத்து, வரும் ...
தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் நாளன்று ( பிப்ரவரி 19 ) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ...
டெஸ்லா காரை விற்பதற்கு மிகப்பெரிய சந்தையாக இந்தியாவை பயன்படுத்துவார்கள், வேலைவாய்ப்பை மட்டும் சீனாவுக்கு வழங்குவீர்களா. டெஸ்லா காருக்கு எந்தவிதத்திலும் சலுகைகள் தரப்படாது என எலான் மஸ்கிற்கு மத்தியஅரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க்கின் நிறுவனம் டெஸ்லா எனும் எலெக்ட்ரிக் கார் கடந்த ஆண்டு ஜனவரியில் பெங்களூருவில் பதிவு செய்தது. இந்தியாவில் வரிகள் அதிகமாக ...
இந்தோனேசியாவில் ஒரு முதலை சுமார் ஆறு வருடங்களாக கழுத்தில் மாட்டிக்கொண்ட டயருடன் அவதிப்பட்டு வந்திருக்கிறது. இந்தோனேசியாவில் இருக்கும் பலூ நகரின் ஆற்றில் கிடந்த முதலையின் கழுத்தில் இருசக்கர வாகனத்தின் டயர் மாட்டிக்கொண்டது. சுமார் ஆறு வருடங்களாக அந்த டயரை முதலையின் கழுத்திலிருந்து நீக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் எடுக்க முடியாமல் போனது. இந்நிலையில் முதலையின் கழுத்திலிருந்து ...
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞரணி தலைவர் சக்தி கோ.ப.செந்தில்குமார் தலைமையில் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இளைஞரணி தலைவர் கோ.ப.செந்தில்குமார் தமிழகம் முழுவதும் ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில் பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக மேல்மருவத்தூர் மருவூர் ...
சென்னை: மணிப்பூர் மாநிலத்தில் இருந்து வேனில் கடத்தி வரப்பட்ட பல கோடி மதிப்புள்ள 11 கிலோ ஆம்பெடமைன் என்ற போதை பொருளை தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இலங்கையை சேர்ந்த மூவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் இருந்து தமிழகம் வழியாக இலங்கைக்கு பல கோடி ...