சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து, பூமியை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் 3 விண்வெளி வீரர்களுடன் இந்திய நேரப்படி, செவ்வாய்க்கிழமை இன்று காலை 10.35 மணியளவில் புறப்பட்ட விண்கலம், பூமிக்கு இன்னும் 15 மணிநேரத்தில் வந்துசேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் போயிங் நிறுவனம் உருவாக்கிய ஸ்டாா்லைனா் விண்கலம், ...

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், (17.03.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோர், விதவை, கல்வி உதவி தொகை, வங்கி கடன், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 171 மனுக்களை பெற்றுக் கொண்டார். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை ...

நீலகிரி மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகம் உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட அமைப்பாளர் விவேகானந்தன் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார், ...

கோவை அருகே உள்ள ஆலாம்பாளைளயம் குள்ளப்பள்ளித்தோட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரதுமனைவி சரஸ்வதி (48). இவருக்கு அரசூர் பகுதியில் 5½ சென்ட் நிலம் இருந்தது. அந்த நிலத்தை அதே பகுதியை சேர்ந்த சத்யமூர்த்தி, விஜயராகவன், ஆறுமுகம் மற்றும் மணி ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்து வேறு ஒருவருக்கு விற்பனை செய்து மோசடி செய்ததாக தெரிகிறது. அந்த நிலத்தின் ...

கோவை மாநகரில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டது. கோவையில் அவிநாசி சாலை, சத்தி சாலை என இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. உக்கடத்தில் தொடங்கி அவிநாசி சாலை ...

கோவை மார்ச் 18 அவிநாசி அருகே உள்ள குன்னத்தூர், புது காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் (55)பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவர் அந்த பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு ஆசை வார்த்தை காட்டி பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அவினாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ...

கோவை துடியலுாரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (45). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கிருத்திகா, (41). இவர்களின் மகன் ஜெயசூர்யா (11). தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது வீட்டில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த முத்துார் ஆலம்பாளையத்தை சேர்ந்த நவீன் (25) என்பவர் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். ...

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் பெண் ஒருவர் இன்ஜினியரிங் முடித்து வீட்டில் இருந்து ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.. இவரிடம் கடந்த 18.11.2024 அன்று அடையாளம் தெரியாத நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை மும்பை போலீஸ் அதிகாரி என்றும் உங்களுக்கு கூரியரில் போதை பொருள் வந்துள்ளது. அதுகுறித்த விசாரணைக்கு வீடியோ அழைப்பில் வாருங்கள் என்று ...

கோவை செட்டிபாளையம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு 2 பேர் உயர் ரகபோதை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் செட்டிபாளையம் போலீசார் செட்டிபாளையம் அருகே ஜெ. ஜெ .நகர் மேம்பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தினார்.ஆனால் ...

நாளை மார்ச் 19ம் தேதி ஆட்டோக்கள் ஓடாது என்று அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நாளை ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவருமான எஸ்.பாலசுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “2013ம் ஆண்டு 1.8 கி.மீ.க்கு ரூ.25, அடுத்தடுத்த ஒவ்வொரு கி.மீ.க்கு ரூ.12 என ...