கோவை குனியமுத்தூர் நரசிம்மபுரம் மேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் குழந்தைசாமி (வயது 53 )இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் உக்கடம் – சுங்கம் பைபாஸ் ரோடு சென்று கொண்டிருந்தார். அங்குள்ளபள்ளிக்கூடம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த பாசஞ்சர் ஆட்டோ இவரது பைக் மீது மோதியது இதில் குழந்தை சாமி படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குகொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைஅளித்தும் பலன் அளிக்காமல்இறந்தார். இதுகுறித்து கோவைமேற்கு பகுதிபோக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஆட்டோ ஓட்டி வந்த உடையாம்பாளையம் அசோக் வீதியைச் சேர்ந்த ராஜு (வயது 43) என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
பைக் மீது ஆட்டோ மோதி விபத்து – ஒருவர் பரிதாப பலி..
