கோவையை சேர்ந்தவர் 18 வயது இளம் பெண். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அப்போது இவருக்கும் மேட்டுப்பாளையம் கணுவாய்பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் விமல்குமார் (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்த வந்தனர். இந்த நிலையில் விமல்குமாரின் நடவடிக்கை சரியில்லாததால் கல்லூரி மாணவி அவருடன் பழகுவதை தவிர்ந்து வந்தார். ஆனாலும் விமல்குமார் விடாமல் மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு தொந்தரவு செய்து வந்தார். இதனால் அந்த மாணவி அவரை கண்டித்துள்ளார். அதில் ஆத்திரம் அடைந்த விமல்குமார் இன்ஸ்டாகிராமில் போலியாக 10 முதல் 15 அக்கவுண்டுகளை வெவ்வேறு பெயர்களில் தொடங்கி உள்ளார். பின்னர் அந்த அக்கவுண்டுகள் மூலம் மாணவி பற்றி தவறாக பதிவேற்றம் செய்து அவதூறு பரப்பி வந்துள்ளார். மேலும் மாணவியின் படங்களை மார்பிங் செய்ததாக தெரிகிறது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்த சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் விமல்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து போலீசார் அவர் தொடங்கிய இன்ஸ்டாகிராம் அக்கவுண்டகளை அழித்தனர்.
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி குறித்து இன்ஸ்டாகிராம்-மில் அவதூறு பரப்பிய ஆட்டோ ஓட்டுநர் கைது..!
