மீஞ்சூர் வண்டலூர் 400 அடி சாலையில் ஆட்டோ ரேஸ்… ஏழு பேர் கைது – பறிபோன 2 உயிர்கள்..

வண்டலூர் மீஞ்சூர் பை பாஸ் 400 அடி பைபாஸ் சாலை சிறுநியம் மேம்பாலம் மேல் அதிகாலை 4.40 மணிக்கு இரண்டு ஆட்டோவிற்கிடையே பந்தயம் கட்டி அதிவேக ரேஸ் நடத்திய ஆதரவாளர்களாக சென்ற ஆட்டோக்களும் கார்களும் டூவீலர்களும் எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

மேற்படி போட்டிகளில் கலந்து கொண்டு பார்வையிட சென்ற சாம் சுந்தர் மற்றும் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானர்.மேலும் அவர்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மோகனகிருஷ்ணன் மற்றும் சுபேர் மற்றொரு மற்றும் ம் வேறு ஒரு சைக்கிலில் பயணம் செய்த மாரிமுத்து விற்கு பலத்த காயமே ர்ப ட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த சம்பவம் குறித்து செங்குன்றம் போக்குவரத்து குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கருடன் சந்துரு என்ற ஆட்டோ மெக்கானிக்கின் tn22k6644 ஆட்டோவிற்கு பெரும்பாக்கம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த sxr சாலா என்ற சாலமன் என்பவரது ஆட்டோவிற்கும் பந்தயம் கட்டி போ ட்டி நடந்ததும் அதில் கலந்து கொள்ள பத்து ஆட்டோக்கள் மற்றும் இரண்டு கார்கள் 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் ஒரே நேரத்தில் அதி வேகமாகவும் அஜாக்கிறதையாவும் வாகனங்களை ஓட்டி பந்தயம் நடத்தியதால் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தை ஏ ற்படுத்திய ஆட்டோ ஓட்டுநர்கள் கார்கள் மற்றும் டூவீலர்களில் வந்தவர்களை உடனடியாக கைது செய்ய ஆவடி போலீஸ் கமிஷனர் க. சங்கர் உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையர் ராஜேந்திரன் மேற்பார்வையில் போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் ஏ. ஜெயலட்சுமி  ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் உதவி ஆணையர்  ரூபன் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபாகர் தலைமையில் நான்கு தனி படைகள் அமைக்கப்பட்டது . மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தின் பின்புறம் முக்கிய குற்றவாளியான கருடன் சந்துரு மற்றும் ஜாய்சன் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் போட்டியில் பயன்படுத்திய tn 22k6644 என்ற ஆட்டோவையும் கைப்பற்றினர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பந்தயத்தில் கலந்து கொண்ட மதி என்பவரை பெரம்பூரில் அவரது மெக்கானிக் கடை முன்பு கைது செய்தும் அவரது tn 05al 7098 என்ற வாகனத்தையும் கைப்பற்றி அவருடன் பந்தயத்தை காண வந்த ரமேஷ் ராஜசேகர் ஆகியவர்களை கைது செய்தும் இருசக்கர வாகனம் tn05cq6248 என்ற வாகனத்தையும் கைப்பற்றினர். மேலும் மூலக்கடையில் வைத்து அண்ணா நகரை சேர்ந்த பிரேம்குமார் ஆவடியைச் சேர்ந்த கௌதம் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்தியtn 07ct 8245 என்ற இருசக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட ஏழு பேரும் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த ஆட்டோ போட்டியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறும் செய்யும் வகையில் ஆட்டோ ஓட்டுநர்கள் கார் ஓட்டுநர்கள் டூ வீலரை ஓட்டி வந்தவர்கள் 30 பேரை தேடி வருகின்றனர் . பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் அச்சம் ஏற்படுத்தும் வகையில் ரேஸ் நடத்துவது குற்றமாகும். கைது செய்யப்படுவதோடு மட்டுமில்லாமல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீஸ் கமிஷனர் சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்..