ரவுடி கண்ட துண்டமாக வெட்டி கொலை… ப்ரொபஷனல் கில்லர்களை 3 மணி நேரத்தில் அதிரடியாக கைது செய்த ஆவடி போலீஸ்.!!

ஆவடி : ஆவடியை அடுத்த திருவேற்காடு சுந்தர சோழபுரம் செல்லியம்மன் நகரைச் சேர்ந்த கேப்டன் என்கிற விஜயகாந்த் என்பவரை முன்விரோதம் காரணமாக கண்ட துண்டமாக வெட்டி கொலை செய்த ப்ரொபஷனல் கில்லர்கள் 4 நபரை மூன்று மணி நேரத்தில் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் அதிரடி ஆலோசனையின் பேரில் கைது செய்யப்பட்டனர் .

இது பற்றிய விவரம் வருமாறு திருவேற்காடு சுந்தர சோழபுரம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கேப்டன் என்கிற விஜயகாந்த் வயது 20 தகப்பனார் பெயர் வேலாயுதம் என்பவரை நள்ளிரவு நேரத்தில் மூன்று நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். இது பற்றிய தகவல் கிடைத்தவுடன் கி. சங்கர் அவசர ஆலோசனை நடத்தி கொலை குற்றவாளிகளை தயவு தாட்சனை இன்றி கைது செய்ய அதிரடி உத்தரவு பிறப்பித்தார். ராஜீவ் ப்ரின்ஸ் ஆரோன் மேற்பார்வையில் திருவேற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய கிருஷ்ணராஜ் மற்றும் போலீஸ் படையினர் தீவிரமாக துப்புத் துலக்கி கேப்டன் என்கிற விஜயகாந்த் கடந்த 2023 ஆம் ஆண்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆரோக்கியசாமி தகப்பனார் வயர் குணசீலர் என்பவரை வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. விஜயகாந்த் தனது தாயாருடன் தூங்கிக் கொண்டிருந்த போது கொலையாளிகள் ஆரோக்கியசாமி அவனது கூட்டாளிகள் சரவணன் விக்கி ஆகியோர் தான் இந்த கொலையை செய்தது என கண்டுபிடித்தனர். கொலை நடந்த மூன்று மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை போலீசார் கைது செய்து பொதுமக்களின் பாராட்டுதலை பெற்றது குறிப்பிடத்தக்கது..