ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத்துறை ஐஜி திடீர் ஆய்வு.!!

ஆவடி : தமிழகம் முழுவதும் 583 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது.இங்கு பணிகள் தொய்வாகவே நடப்பதாகவும், பல்வேறு பணிகளுக்கு வரும் பொதுமக்கள் அலைகழிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. மேலும் பல அலுவலகத்தில், புரோக்கர் கட்டுப்பாட்டில் இருந்ததை சமீபத்தில் ஜஜி கையும் களவுமாக பிடித்தார். இதையடுத்து அங்கிருந்த சார்பதிவாளர் அதிரடியாக மாற்றப்பட்டனர். அலுவலகங்களுக்கு வில்லங்கம், சான்றிட்ட நகல் விண்ணப்பித்தவருக்கு காலதாமதமாக வழங்கப்படுகிறது. ஆனால், புரோக்கர்கள் மூலம் அணுகினால் விரைவில் கிடைத்து விடுகிறது. இங்கு அலுவலகங்களில் முறைகேடு நடப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் தமிழகம் முழுவதும் எழுந்து வரும் நிலையில் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சார்பதிவாளர் அலுவலகங்களில் சமீபகாலமாக திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்

இந்த நிலையில் திருவள்ளூர் இணை சார் பதிவாளர் அலுவலகம் மற்றும் ஆவடி சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார், திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தின் வெளியே நின்று இடைத்தரகர்கள் யாரேனும் பதிவு செய்ய வரும் நபர்களிடம் பேரம் பேசுகின்றனரா என்பது குறித்து 15 நிமிடங்கள் பொதுமக்களோடு பொதுமக்களாய் வெளியே நின்று ஆய்வு மேற்கொண்ட பின்னர் சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ளே சென்று பதிவு ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை ஆய்வு செய்து சார்பதிவுத்துறை அலுவலர்கள் தவிர வேறு எந்த தனிநபரும் இருக்கின்றனரா என்பது குறித்து கேட்டறிந்துள்ளார்

மேலும் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் பொது மக்களின் டோக்கன்கள் முறையாக பதிவு செய்யப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்த அவர் திருவள்ளூரில் சுமார் 81 சதவீதம் அளவிற்கு தினம்தோறும் டோக்கன்கள் பதிவு செய்யப்படுவதாக அங்கு பணியில் இருந்த சார்பதிவாளர் உதயனிடம் உறுதிப்படுத்திக் கொண்டார்.

பின்னர் அலுவலகத்தில் உள்ள அறைகளில் சென்று ஆய்வு மேற்கொண்ட பதிவுத்துறை தலைவர் அலுவலகங்களை முறையாக சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்து தர வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதைப்போல் ஆவடி சார்பதிவாளர் அலுவலகம் தொடர்பாக பல்வேறு புகார் வருகிறது. பொதுமக்களை அலைகழிப்பு செய்ய கூடாது. பதிவு அறையை ஆய்வு செய்தார். பட்டா மாற்றம் தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார். நிலுவை பத்திரம், வில்லங்கசான்று, சான்றிட்ட நகல் விவரங்களை உடனுக்குடன் விடுவிக்க அறிவுறுத்தினார். பதிவுக்கு வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடக்க வேண்டுமென சார்பதிவாளர் பிரகாஷ் அறிவுரை வழங்கினார்

பிறகு ஆய்வை முடித்துக் கொண்டு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இங்கிருந்து கிளம்பிச் சென்றார்
இந்த திடீர் ஆய்வினால் இரு சார் பதிவாளர் அலுவலகத்தில் சுமார் 1மணி நேரம் பரபரப்பான சூழ்நிலையை நிலவியது