தமிழ்நாடு தீயணைப்பு வடசென்னை மாவட்டம் கொளத்தூர், செம்பியம் ஆகிய தீயணைப்பு-மீட்புபணி நிலையத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பருவமழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை முன்னிட்டு சென்னை கொளத்தூர் பெரியார் நகர் மெட்ரிக் பள்ளியில் தீ விபத்து தடுப்பு குறித்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றொர்களுக்கு மாதிரி விழிப்புணர்வு ஒத்திகை தமிழ்நாடு தீயணைப்பு மீட்புபணிகள்த்துறை இயக்குனர் அபாஸ்குமார் ஆணைபடி, வட மண்டல இணை இயக்குனர் பிரியாரவிசந்திரன் அறிவுரத்தலின்படி வடசென்னை மாவட்ட அலுவலர் லோகநாதன் அறிவுரத்தலின்படி நடைபெற்றது. பின்னர் கொளத்தூர் நிலைய அலுவலர் ரமேஷ், செம்பியம் நிலைய அலுவலர் பரமேஸ்வரன் மற்றும் நிலைய பணியாளர்கள் இணைந்து தீ விபத்து தடுப்பு குறித்து மாதரி ஒத்திகை செய்முறைகள் மூலம் விளக்கி பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் தீயணைப்புத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட சுமார் 200-க்கும் மேற்பட்ட பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
சென்னை கொளத்தூர் பெரியார் நகர் மெட்ரிக் பள்ளியில் தீ விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு ..!
